OnePlus 7 news

பிரீமியம் ஆண்ட்ராய்டு மொபைல் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் வெளியிட்டுள்ள, புதிய ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் ரியர் கேமரா கொண்டு ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டதாக வந்துள்ளது.

மிரர் கிரே மற்றும் சிவப்பு நிறம் என இரு நிறங்களில் மட்டும் ஒன்பிளஸ் 7 விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஜூன் மாதம் முதல் ஒன்பிளஸ் 7-யின் விற்பனை தொடங்கப்பட உள்ள நிலையில் துல்லியமான தேதி விபரம் வெளியாகவில்லை.

ஒன்பிளஸ் 7 விலை

ஒன்பிளஸின் புதிய 7 வரிசை மாடலில் அமைந்துள்ள குறைந்த விலை கொண்ட இந்த போனின் விற்பனை ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட ஒன்பிளஸ் 7 ரூ. 32,999 விலையில் (மிரர் கிரே நிறம் மட்டும்), அதே நேரத்தில் 256 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 8GB ரேம் மாறுபாடு ரூ 37,999 விலையில் (மிரர் கிரே & சிவப்பு நிறம்) கிடைக்கும். அமேசான் இந்தியா மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்க உள்ளது.

மேலும் படிங்க – ஒன்பிளஸ் 7 ப்ரோ விலை மற்றும் சிறப்புகள்

ஒன்பிளஸ் 7 சிறப்புகள்

6.6 அங்குல திரையை கொண்ட இந்த மொபைலில் 3120 x 1440 பிக்சல்ஸ் உடன் Quad HD+ 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் AMOLED உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டதாக விளங்கும் இந்த போனில் மிரர் கிரே மற்றும் சிவப்பு நிறம் இரண்டு நிறங்கள் கிடைக்கும்.

குவால்காம் நிறுவன ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டுள்ள இந்த போனில் ஆண்ட்ராய்டு 9.0 (Pie) அடிப்படை ஆக்‌ஸிஜன் ஓஎஸ்9.5 கொண்டு இயக்கப்பட்டு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு , 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு கொண்டுள்ளது.

48 மெகாபிக்சல் கேமரா டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவுடன், f/1.6 துவாரத்துடன் 1/2.25″ சோனி IMX586 மற்றும் 5 மெகாபிக்சல் செகன்ட்ரி கேமரா கொண்டதாக அமைந்துள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என முன்புற கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது.

டூயல் 4G VoLTE, WiFi 802.11 ac, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் + GLONASS, யூஎஸ்பி டைப் சி போன்றவற்றுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ போனை இயக்க 3700mAh பேட்டரி உடன் விரைவான சார்ஜிங் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

OnePlus 7 specifications

  • 6.41 அங்குல (2340 × 1080 பிக்சல்ஸ்) Quad HD+ 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் AMOLED டிஸ்பிளே உடன் 516PPI, sRGB color gamut, DCI-P3 color gamut, HDR10, 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
  • குவால்காம் ஆக்டடோ கோர் ஸ்னாப்டிராகன் 855 7nm (1 x 2.84GHz Kryo 485 + 3 x 2.42GHz Kryo 485 + 4x 1.80GHz Kryo 485) with Adreno 640 GPU
  • 6GB LPDDR4X ரேம் உடன் 128GB (UFS 3.0) சேமிப்பு, 8GB LPDDR4X ரேம் உடன் 256GB (UFS 3.0)
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) அடிப்படை ஆக்‌ஸிஜன் ஓஎஸ்9.5
  • இரட்டை சிம்
  • 48MP கேமரா டூயல் எல்இடி ஃபிளாஷ், 7P lens, f/1.6 aperture, 1/2.25″ சோனி IMX586 sensor, 0.8μm pixel size, OIS, EIS,  5MP செகன்ட்ரி கேமரா 1.12 µm pixel size, f/2.4 துவாரம்
  • 16MP முன்புற கேமரா சோனி IMX471 சென்சார், f/2.0 துவாரம், 1.0μm pixel size
  • இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
  • யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, டூயல் ஸ்டீரியோ ஸ்பிக்கர், டால்பி ஆட்டம்ஸ்
  • அளவுகள்:  157.7×74.8×8.2 mm; எடை: 182g
  • டூயல் 4G VoLTE, WiFi 802.11 ac (2.4GHz + 5GHz) 2×2 MIMO, ப்ளூடூத் 5, GPS (L1+L5 Dual Band) + GLONASS, USB Type-C
  • 3700mAh பேட்டரி உடன் ஃபாஸ்ட் சார்ஜிங் (5V/6A)

ஒன்பிளஸ் 7 ரேட்