டிரிப்ள் கேமராவுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ விபரம் கசிந்தது

ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் வரிசையில், ஒன்பிளஸ் 7 ப்ரோ (Oneplus 7 Pro), ஒன்பிளஸ் 7 வெனிலா மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ 5ஜி என மொத்தமாக மூன்று வேரியன்ட்களில் விற்பனைக்கு இந்த ஆண்டு ஒன்பிளஸ் நிறுவன மொபைல் போன்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள ஒன்பிளஸ் 7 ப்ரோவில் டிரிப்ள் கேமரா செட்டப், பாப் அப் செல்ஃபி கேமரா உட்பட ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இய்யக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ பற்றி லீக்கான விபரங்கள்

சீனாவின் சமூக ஊடக வலைதளமான வீபோவில் வெளிவந்துள்ள விபரங்களின் அடிப்படையில் உள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் மொபைல் படத்தின் விபரத்தை தொடர்ந்து காணலாம்.

முழுமையான காட்சி திரை பெற்ற ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு பாப் அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கலாம். பிரைமரி சென்சார் ஆப்ஷனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்பட்டு 48 எம்பி சென்சார், 8 எம்பி சென்சார் மற்றும் 16 எம்பி சென்சார் கொண்டு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை பின்பற்றி செயல்படும் மாடலாக விளங்கும்.

இந்த போனினை இயக்க குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் பெற்றதாக விளங்கும் என தெரிய வந்துள்ளது.

இஷான் அகர்வால் வெளியிட்ட டிவிட்டர் குறிப்பில் ஒன்பிளஸ் 7 வரிசை மாடலில் 5ஜி உட்பட மொத்தம் மூன்று வேரியன்ட்டுகள் வெளியிடப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.