ஒன்பிளஸ் 7 ப்ரோ

இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 7 ப்ரோ ரக மாடல் 16 மெகாபிக்சல் பாப் அப் செல்ஃபி கேமரா பெற்று விளங்குகின்றது.

ஒன்பிளஸ் 7 ப்ரோவில் 6 ஜிபி , 8 ஜிபி மற்றும் 12 ஜிபி என மொத்தம் மூன்று விதமான ரேம் மாறுபாட்டில் விற்பனைக்கு கிடைக்கின்றது. 7 ப்ரோவில் பிரைமரி ஆப்ஷனில் டிரிப்ள் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. 90 ஹெர்ட்ஸ் ரிஃபிரெஷ் ரேட்டிங் உடன்  QHD+ திரையை கொண்டிருக்கின்றது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ விலை

பல்வேறு ஆஃபர்கள் மற்றும் சலுகைகளை வழங்கப்பட்டுள்ள ஒன்பிளஸ் 7 ரக மாடலுக்கு குறிப்பாக அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பதுடன் ஆஃப்லைன் ஸ்டோர்களிலம் கிடைக்கும்.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட ஒன்பிளஸ் 7 புரோ ரூ 48,999 விலையில் (மிரர் கிரே நிறம் மட்டும்), அதே நேரத்தில் 128 ஜிபி உள் சேமிப்பு கொண்ட 8GB ரேம் மாறுபாடு ரூ 52,999 விலையிலும் (ஆல்மான்ட், மிரர் கிரே மற்றும் நெபுலா ப்ளூ) 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு கொண்ட உயர் வகை ரூ .59,999 விலையில் (நெபுலா ப்ளூ) கிடைக்க உள்ளது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ விலை

மே 17 முதல் அமேசானில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த போனில் மிரர் கிரே மட்டும் கிடைக்கும். நெபுலா ப்ளூ நிறம் மே 28 முதல் கிடைக்கும். ஜூன் மாதம் முதல் ஆல்மான்ட் நிறம் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 7 ப்ரோ

ஒன்பிளஸ் 7 ப்ரோ சிறப்புகள்

6.6 அங்குல திரையை கொண்ட இந்த மொபைலில் 3120 x 1440 பிக்சல்ஸ் உடன் Quad HD+ 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் AMOLED உடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டதாக விளங்கும் இந்த போனில் ஆல்மான்ட், மிரர் கிரே மற்றும் நெபுலா ப்ளூ மூன்று நிறங்கள் கிடைக்கும்.

குவால்காம் நிறுவன ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டுள்ள இந்த போனில் ஆண்ட்ராய்டு 9.0 (Pie) அடிப்படை ஆக்‌ஸிஜன் ஓஎஸ்9.5 கொண்டு இயக்கப்பட்டு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு , 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு  மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு கொண்டுள்ளது.

கேமரா பிரிவில் டிரிப்ள கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.48 மெகாபிக்சல் கேமரா டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவுடன் 7P len கொண்டு f/1.6 துவாரத்துடன் 1/2.25″ சோனி IMX586 பெற்றுள்ளது. 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கேமரா f/2.4 துவாரம் உடன் 3x சூம் வசதியை பெற்றும், 16 மெகாபிக்சல் பெற்ற 117°அல்ட்ரா வைட் கேமரா f/2.2 துவாரத்தை பெற்றுள்ளது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ போன்

செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என பாப் அப் செல்ஃபி கேமரா 16 மெகாபிக்சல் கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா மெக்கானிசம் 3 லட்சம் முறைக்கு மேல் சோதனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன் ஸ்கீரின் ரெபக்கார்டிங் வசதி, ஜென் மோட் வாயிலாக கூடுதலாக 20 நிமிடம் அவசர அழைப்புகள் மற்றும் கேமரா இயங்கும். டூயல் 4G VoLTE, WiFi 802.11 ac, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் + GLONASS, யூஎஸ்பி டைப் சி போன்றவற்றுடன் ஒன்பிளஸ் 7 ப்ரோ போனை இயக்க 4000mAh பேட்டரி உடன் விரைவான சார்ஜி ஆக ரேப் சார்ஜ் 30 இணைக்கப்பட்டுள்ளது.

OnePlus 7 Pro specifications

 • 6.67-inch (3120 x 1440 பிக்சல்ஸ்) Quad HD+ 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் AMOLED display with 516PPI, 90Hz refresh rate, sRGB color gamut, DCI-P3 color gamut, HDR10, 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
 • குவால்காம் ஆக்டடோ கோர் ஸ்னாப்டிராகன் 855 7nm (1 x 2.84GHz Kryo 485 + 3 x 2.42GHz Kryo 485 + 4x 1.80GHz Kryo 485) with Adreno 640 GPU
 • 6GB LPDDR4X ரேம் உடன் 128GB (UFS 3.0) storage, 8GB / 12GB LPDDR4X ரேம் உடன் 256GB (UFS 3.0)
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) அடிப்படை ஆக்‌ஸிஜன் ஓஎஸ்9.5
 • இரட்டை சிம்
 • 48MP கேமரா டூயல் எல்இடி ஃபிளாஷ், 7P lens, f/1.6 aperture, 1/2.25″ சோனி IMX586 sensor, 0.8μm pixel size, OIS, EIS,  8MP டெலிபட்டோ f/2.4 aperture, 1.0 μm pixel size, OIS, 3x zoom, 16MP 117°அல்ட்ரா வைட் உடன் f/2.2 aperture
 • 16MP முன்புற கேமரா சோனி IMX471 sensor, f/2.0 aperture, 1.0μm pixel size
 • இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
 • USB Type-C audio, Dual Stereo speakers, Dolby Atmos
 • அளவுகள்: 162.6×75.9×8.8 mm; எடை: 206g
 • டூயல் 4G VoLTE, WiFi 802.11 ac (2.4GHz + 5GHz) 2×2 MIMO, ப்ளூடூத் 5, GPS (L1+L5 Dual Band) + GLONASS, USB Type-C
 • 4000mAh பேட்டரி உடன் ரேப் சார்ஜ் 30 (5V/6A)

ஒன்பிளஸ் 7 ப்ரோ