OnePlus 7, OnePlus 7 Pro 5G details in Tamil

வரும் மே 14, 2019-ல் இந்தியாவில் ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் பல்வேறு நுட்பவிபரங்கள் மற்றும் விலை தற்போது கசிந்துள்ளது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் /  256 ஜிபி உள்சேமிப்பு விலை EUR 749 (  ரூ. 58,500) மற்றும் 12 ஜிபி ரேம் /  256 ஜிபி உள்சேமிப்பு விலை EUR 819 (ரூ. 64,000) ஆக நிர்ணயம் செய்யப்படலாம் என பிரபல லீக் ஸ்டார் இஷான் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பிளஸ் 7 ப்ரோ விபரம்

சமீபத்தில் வெளியான பல்வேறு விதமான நுட்ப விபரங்களின் படி ஒன்பிளஸின் 7 ப்ரோவில் பாப் அப் செல்பி 16 எம்பி கேமரா சென்சாருடன், பிரைமரி ஆப்ஷனில் 48 எம்பி சென்சார், 3x ஜூம் ஆதரவுடன் கூடிய 8 எம்பி சென்சார், 117 டிகிரி கோண அல்டரா வைட் ஏங்கிள் லென்ஸ் 16 எம்பி சென்சார் என மொத்தமாக மூன்று கேமரா ஆப்ஷனை கொண்டிருக்கலாம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் பெற்று பொதுவாக 256 ஜிபி சேமிப்பை கொண்டதாக இருக்கும். இந்த போனில் 30W ரேப் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 4,000mAh பேட்டரி கொண்டதாக வரவுள்ளது.

6.7 அங்குல QHD+ (3120×1440 பிக்சல்ஸ்) திரையை கொண்டு 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக , இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு நவீன அம்சங்களை கொண்டிருக்கும். இந்த போனில் கிரே, பிரவுன், மற்றும் நீல நிறங்களுடன் வரக்கூடும்.

மேலும் ஒன்பிளஸ் 7 ப்ரோ அடிப்படையாக கொண்ட 5ஜி ஆதரவை பெற்ற மொபைல் மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது.