இந்திய சந்தையில் ரூ.37,999 ஆரம்ப விலையில் ஒன்பிளஸ் 7T மொபைல் மூன்று கேமரா, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் பெற்று பல்வேறு வசதிகளை கொண்டதாக விற்பனைக்கு 8 ஜிபி ரேம் பெற்று வந்துள்ளது.
6.55-இன்ச் FHD + Fluid AMOLED டிஸ்ப்ளே பெற்றுள்ள இந்த மாடலில், 90 ஹெர்ட்ஸ் ரிஃபெரஷை பெற்று HDR10 + மற்றும் 20: 9 விகிதத்துடன் வந்துள்ளது. திரையில் 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் SoC மூலம் இயக்கப்பட்டு 8 ஜிபி ரேம் உடன் ஆண்ட்ராய்டு 10.0 இயங்குதளத்தை பின்னணியாக கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 10 உடன் செயல்படுகின்றது. சோனி IMX 586 சென்சார் மற்றும் ஓஐஎஸ் உடன் கூடிய 48 மெகாபிக்சல் பின்புற கேமரா, 16 எம்பி 117 ° அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன் 2.5 மேக்ரோவையும் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமுக்கு 12 எம்பி டெலிஃபோட்டோ கேமராவை பெற்றுள்ளது.
ஒன்பிளஸ் 7 போன்ற சோனி IMX 471 சென்சாருடன் முன்பக்கத்தில் அதே 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. 3800 எம்ஏஎச் பேட்டரியுடன் ரேப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் மொபைலை சார்ஜ் செய்ய முடியும் புதிதாக புதுப்பிக்கப்பட்ட பேட்டரி அமைப்பு மற்றும் உகந்த வழிமுறையுடன் அரை மணி நேரத்தில் 70%. சார்ஜிங் பெற இயலும்.
ஒன்பிளஸ் 7T சில்வர் மற்றும் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கின்றது. இதன் 8ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு ரூ. 37,999 மற்றும் 256 ஜிபி சேமிப்பு பதிப்பின் விலை ரூ. 39.999. இது அமேசான்.இன், ஒன்ப்ளஸ்.இன், அனைத்து ஒன்பிளஸ் ஆஃப்லைன் கடைகளிலும் செப்டம்பர் 28 முதல் கிடைக்கும்.