அக்டோபர் 14.., ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்

வரும் அக்டோபர் 14 ஆம் தேதி ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட சர்வதேச அளவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட் பெற்றிருக்கலாம் என எதிர்பார்கப்படுகின்றது.

மை ஸ்மார்ட் பிரைஸ் டிப்ஸ்டெர் இஷான் அர்வால் வெளியிட்டுள்ள செய்தி மூலம் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 புரோ வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட உள்ள 8டி மாடல் சிறிய அளிவலான ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் சிறப்பான கேமரா ஆப்ஷனை பெற உள்ளது.

ஒன்பிளஸ் 8T விபரம்

ஒன்பிளஸ் 8டி மாடலில் 6.55 அங்குல FHD+ Fluid AMOLED டிஸ்பிளே உடன் 120Hz ரிஃபெரஷ் ரேட் கொண்டு தற்போது உள்ள ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மாடலுக்கு மாற்றாக புதிய ஸ்னாப்டிராகன் 865+ பெற்று 8GB + 128GB அல்லது 12GB + 256GB  ஆப்ஷனை கொண்டிருக்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட கேமரா லேஅவுட் செட்டபில்  48MP முதன்மையான சென்சார், 16MP அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், 5MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP போர்ட்ரெயிட் சென்சாருடன் குவாட் கேமரா ஆப்ஷனை பெறுகின்றது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32 எம்பி சென்சார் கொண்டிருக்கலாம்.

65 வாட்ஸ் விரைவு சார்ஜிங் வசதியுடன் 4,500mAh பேட்டரியை பெற்று ஒன்பிளஸ் 8T மாடலில் 5G, 4G LTE, டூயல் பேண்டு வை-ஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவை அமைந்துள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை பின்பற்றி ஆக்ஸிஜன் ஓஎஸ் 11 மூலம் இயக்கப்படும்.