ஒன்பிளஸ் நார்டு அறிமுக தேதி
ஒன்பிளஸ் நார்டு அறிமுக தேதி

மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ரூ.38,000 விலைக்குள் வெளியிடப்பட உள்ள நார்டு ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி ஜூலை 21 ஆம் தேதி 7:30PM IST நேரப்படி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா இணையதளத்தில் ப்ரீ புக்கிங் துவங்க உள்ளது. குறிப்பாக, ப்ரீபுக்கிங் செய்பவர்கள் ரூ.499 செலுத்துவது அவசியமாகிறது. ரூ.499 மதிப்பிலான கிஃப்ட் பாக்ஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக இந்த மொபைல் வாங்குவோருக்கு இரண்டாவது கிஃப்ட் பாக்ஸாக ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் V1 இயர்போன் மற்றும் மொபைல் கேஸ் கவர் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக, ப்ரீ ஆர்டர் மேற்கொள்ளும் ஒன்பிளஸ் விரும்பிகள், ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது கட்டாயமாகும்.

ஒன்பிளஸ் நார்டு 5ஜி ஆதரவினை பெற்ற மொபைலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 765G கொண்டு 6.55 அங்குல AMOLED டிஸ்பிளேவுடன் 90Hz ரிஃபெரஷ் ரேட் கொண்டதாக அமைந்திருக்கலாம். கேமரா பிரிவை பொறுத்தவரை செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு டூயல் கேமரா பெற்றிருக்கும், அதேநேரத்தில் பிரமைரி ஆப்ஷனை பொறுத்தவரை குவாட் கேமரா கொண்டதாக அமைந்திருக்கும்.

வரும் ஜூலை 21 ஆம் தேதி மாலை 7.30 மணி இந்திய நேரப்படி பிரத்தியேகமான ஒன்பிளஸ் நார்டு ஆப் மூலமாக உலகில் முதல்முறையாக AR முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.