5ஜி தொலைத்தொர்பு முறைக்காக முதல் ஒன்பிளஸ் நிறுவன மாடலை ஒன்பிளஸ் 5ஜி என பார்சிலோனவில் நடைபெறும் உலக மொபைல் காங்கிரஸ் 2019-ல் இந்நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி, சியோமி மி மிக்ஸ் 3 5ஜி, ஒப்போ 5ஜி மற்றும் ஹூவாய் மேட் எக்ஸ் 5 ஜி ஆகியவற்றுடன் ஒன்பிளஸ் நிறுவனமும் 5ஜி ஆதரவை பெற உள்ள ஸ்மார்ட்போனின் ப்ரோட்டோடைப் மாடலை காட்சிப்படுத்தியுள்ளது.

ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்புகள்

உலக மொபைல் காங்கிரஸ் 2019-ல் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த 5ஜி ஆதரவை பெற்ற ஒன்பிளஸ் மொபைல் போனின் உற்பத்திக்கு முந்தைய நிலை மாடல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மொபைல் 5ஜி சேவையில் மிக சிறப்பான அனுபவத்தை வழங்குவதுடன் 5ஜி கிளவுட் கேமிங் நுட்பத்தில் உயர்ந்த பெர்ஃபாமென்ஸை வழங்குகின்ற வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு ஸ்னாப்டிராகன் X50 மோடத்தை 5ஜி சேவைக்கு என பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட உள்ளது.

ஒன்பிளஸ் தலைவர் 5ஜி மொபைல் போன் பற்றி கூறுகையில், 5ஜி சேவை மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றமாக விளங்கும். மேலும் இது கேமிங் முதல் தகவல் தொடர்பு, சுகாதார மற்றும் என பல்வேறு விதமான நுட்பங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுமத்தும். 5G எப்படி உலகத்தை மாற்றும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கேமிங் ஆகும்.  அதிவேகம், மிக சிறப்பான செயலாற்றல் மற்றும் நெட்வொர்க் திறன் ஆகியவற்றில் 5ஜி வாயிலாக வியத்தகு முன்னேற்றம் உண்மையில் கிளவுடீங் விளையாட்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை காணலாம் என குறிப்பிட்டுள்ளார்.