மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 அரங்கில் , ஒப்போ நிறுவனம் புதிய 10x lossless zoom தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேமரா நுட்பம் மூலம் 10 மடங்கு ஜூம் செய்தாலும் மிக சிறப்பான புகைப்படத்தை பெற உதவுகின்ற வகையில் வடிவமைகப்பட்டுள்ளது.

ஒப்போ மொபைல் கேமரா டெக்னாலஜி

MWC 2019 கண்காட்சியில், ஒப்போ மொபைல் நிறுவனம் 5ஜி மொபைல் பற்றி அறிவிப்பினை தொடர்ந்து வெளியிட்டுள்ள 10 மடங்கு ஜூம் செய்யப்பட்டு எடுக்கின்ற புகைப்படங்களின் உண்மை தன்மை பாதிப்படையாமல் படங்களை பெறும் நுட்பத்தை தனது மொபைல்களுக்கு உருவாக்கியுள்ளது.

ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் விபரம்

மூன்று பின்புற கேமரா லென்ஸ்களை பெற்ற மாடல்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டெக்னாலஜி ஓப்போவின் புதிய 5ஜி மற்றும் 4ஜி மொபைல்களில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு முதல் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் இதே காலகட்டத்தில் ஒப்போ 5ஜி மொபைல்கள் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பெரிஸ்கோப் முறையில் வடிவமைக்கப்பட மூன்று கேமரா சென்சார்கள் உதவியுடன் இத்தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றன. 48 மெகாபிக்ஸல் சென்சார் பெற்ற உயர் திறன் பிரைமரி கேமரா, 120 டிகிரி அல்ட்ரா வைட் ஆங்கிள் 16 மெகாபிக்ஸல் லென்ஸ் மற்றும் 160mm டெலிபோட்டோ லென்ஸ் சென்சார் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த டெலிபோட்டோ லென்ஸில் இரண்டு ஆங்கில எழுத்து ‘D வடிவ வெட்டு’ (D-Cut) ஆப்டிகல் லென்ஸ்கள் இருக்கும். இந்த கேமரா அமைப்புக்கு 15 மில்லி மீட்டர் இடம் தேவைப்பட்டிருக்கும். ஆனால், D வடிவ வெட்டு கொண்ட லென்ஸ்களை பெரிஸ்கோப் அடிப்படையில் கொண்டு, வட்ட வடிவ லென்ஸில் இரண்டு இணையான வெட்டுகள் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இதன் மூலம் 6.67 மில்லி மீட்டர் மட்டும் இந்த கேமராவுக்கான இடம் தேவைப்படும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

இந்த மொபைல் கேமரா டெக்னாலாஜி நுட்பம் முதன்முறையாக இரண்டாவது காலண்டில் வரவுள்ள போனில் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் 5ஜி சேவை சார்ந்த மொபைல் பற்றி அறிவிப்பை வெளியிட்டடுள்ளது.

மேலும் படிங்க – புதிய ஸ்மார்ட்போன் செய்திகள் மற்றும்  மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 செய்திகளை படிக்கலாம்