ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் விபரம்

ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின், முதல் 5ஜி தொலைத்தொடர்பு ஆதரவை பெற்ற ஸ்மார்ட்போன் பற்றி முக்கிய அறிவிப்பை MWC 2019 அரங்கில் வெளியிட்டுள்ளது. இதுதவிர 10 மடங்கு மிக துல்லியமாக ஜூம் செய்து படங்களை பதிவு செய்தாலும் தெளிவாக பெற உதவும் நுட்பத்தை வெளியிட்டுள்ளது.

5ஜி டெலிகாம் சேவை அமெரிக்கா, லண்டன் மற்றும் சில ஐரோப்பா நாடுகளில் தொடங்கப்பட உள்ள நிலையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 5ஜி தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது.

ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் நுட்பவிபரம்

சீனாவின் ஒப்போ மொபைல் நிறுவனம், 5ஜி ஸ்மார்ட்போன் தொடர்பான முதல் அதிகார்வப்பூர்வ அறிவிப்பை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 அரங்கில் வெளியிடப்பட்ட நிகழ்வில், 5ஜி மொபைல் வரவுள்ளதை மட்டும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் இந்நிறுவனம் எவ்விதமான நுட்பவிபரம் மற்றும் விலை போன்றவற்றை குறிப்பிடவில்லை. இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

ஒப்போ 5ஜி மொபைல்போன் பற்றி அறிக

குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பராசெஸருடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்50 மோடம் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ 5ஜி மொபைல் குறித்து குவால்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4ஜி சந்தையில் ஒப்போவின் மிக சிறப்பான வளர்ச்சி 5ஜி டெலிகாம் சேவைக்கும் வழங்க இந்நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் குவால்காம் 5ஜி நுட்பம் தொடர்பான அம்சத்தை ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் மற்றும் எக்ஸ்50 மோடம் 5ஜி கூடுதலாக ஒருங்கினைக்கபட்ட RF டிரான்ஸ்சிவர் மற்றும் RF பிரென்ட் என்ட் சொலியுஷன்” ஆகியவற்றை பெற்றதாக ஒப்போ மொபைல் போன் விளங்கும் என குறிப்பிட்டுள்ளது.

ஒப்போ நிறுவனம், முதற்கட்டமாக ஆஸ்திரேலியாவின் ஆப்டஸ் மற்றும் டெலிஸ்டரா, சிங்கப்பூரின் சிங்டெல் , மற்றும் ஸ்விஸ்காம் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவை கொண்ட மொபைலை வழங்க உள்ளது.

இந்தியாவில் ஒப்போ நிறுவன், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் டெலிகாம் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி ஆதரவு மொபைல்களை தயாரிக்க உள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் மேற்கொள்ள உள்ள முதலீடு மூலம், இந்தியாவின் ஒப்போ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவினை மேம்படுத்தவும் புதிதாக பணியாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் படிங்க – புதிய ஸ்மார்ட்போன் செய்திகள் மற்றும்  சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 செய்திகளை படிக்கலாம்