விரைவில்.., பட்ஜெட் விலை ஓப்போ A11k மொபைல் விற்பனைக்கு அறிமுகம்

ரூ.8,999 விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற புதிய ஓப்போ A11k ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா பெற்றதாக அடுத்த சில வாரங்களுக்குள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

இந்தோனேசியா சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஓப்போ ஏ12 ஸ்மார்ட்போனின் அடிப்படையிலான ஓப்போ A11k மொபைலில் 6.22 அங்குல HD+ IPS LCD டிஸ்பிளே பெற்றதாக மீடியாடெக் Helio P35 ஆக்டோ கோர் சிப்செட் பெற்று 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பை பெற்றிருக்கும்.

கேமரா பிரைமரி ஆப்ஷனில் டூயல் கேமரா பெற்ற 13 எம்பி மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கொண்டிருக்கும். அதே நேரத்தில் வீடியோ மற்றும் செல்ஃபீ அழைப்புகளுக்கு என 5 எம்பி சென்சாரை கொண்டிருக்கும்.

ஓப்போ ஏ 11 கே  மொபைலில் கலர்ஓஎஸ் 7 இயங்குதளம், ஆண்ட்ராய்டு 10 அடிப்படையில் இயங்கும். கூடுதல் இணைப்பைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் GLONASS ஆகியவற்றை ஆதரிக்கிறது. மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 போர்ட் மற்றும் 10W விரைவு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் நிறுவனம் 4,230 எம்ஏஎச் பேட்டரியை பெற்றுள்ளது.