ஒப்போ A5

சீனாவின் ஒப்போ நிறுவனம், புதிய ஒப்போ ஏ5 ஸ்மார்ட்போனை மாடலை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு வசதியுடன் விற்பனைக்கு ரூ.12,990 விலையில் வெளியிட்டுள்ளது. முன்பாக கடந்த ஆண்டு அறிமுகமான 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு வசதி கொண்டதாக ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கடந்த வருடம் இந்தியாவில் வெளியிடப்பட்ட ஒப்போ ஏ5, 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு வசதி கொண்டு 14,990 ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் பின்பு ரூ. 3,000 வரை விலை குறைக்கப்பட்டிருக்கின்றது.

ஒப்போ A5 ஸ்மார்ட்போன்

ஒப்போ A5 ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதள அமைப்பில் கலர்ஓஎஸ் 5.1 கொண்டு செயல்படும் இந்த போனில் 6.2 அங்குல ஹெச்டி+ (720×1520 பிக்சல்ஸ்) முழு காட்சி 19: 9 விகிதத்துடன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு வசதி கொண்டிருக்கும். மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவுடன் 256 ஜிபி ஆதரவை வழங்க வல்லதாகும்.

டுயல் ரியர் கேமரா செட்டப் பெற்ற இந்த போனில் 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கின்றது. செல்ஃபி கேமரா பிரிவில் 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டடிருக்கின்றது.

4230mAh  பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக இரட்டை சிம் ஆதரவு, 4ஜி VoLTE, Wi-Fi 802.11 b / g / n ஏ, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்றவை உள்ளன.

தற்போது ஆஃப்லைனில் ஒப்போ A5 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூ.11,990 மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி  உள் சேமிப்பு விலை ரூ.12,990 ஆகும்.