இந்தியாவின் BIS மற்றும் NBTC தாய்லாந்து சான்றிதழ் மூலம் ஒப்போ ஏ5எஸ் (Oppo A5s) ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியாக உள்ளது. இந்த போனில் 2GB/3GB/4GB ரேம் என மொத்தம் மூன்று வகைகளில் கிடைக்க வாய்ப்புள்ளது.

டூயல் கேமரா ஆப்ஷனுடன் வரவுள்ள ஒப்போ A5s போனில் பேட்டரி அமைப்பில் 4230mAh வழங்கப்பட்டிருக்க கூடும். குறைந்த விலை கொண்ட மாடலாக ஏ5எஸ் விளங்க உள்ளது.

ஒப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போன் நுட்பவிபரம்

இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஒப்போ ஏ5 எஸ் போனில் 6.2 அங்குல ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் திரையுடன் , 1520×720 பிக்ல்ஸ் தீர்மானத்தை கொண்டிருக்கும், இந்த மாடலில் கேமரா சார்ந்த அம்சாக , பிரைமரி பிரிவில் 13 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டிருக்கும்.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 8 எம்பி சென்சார் இடம்பெற்றிருக்கும். ஒப்போ ஏ5எஸ் போனில் பின்புறத்தில் கைரேகை சென்சார் பெற்று சிவப்பு, கருப்பு , கோல்டு மற்றும் பச்சை நிறங்களை கொண்டதாகவும், 4230mAh  பேட்டரி மூலம் இயக்கப்பட உள்ளது.

இந்த போனை இயக்க ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை பின்பற்றி, மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் கொண்டு 2.3 GHz மற்றும் IMG PowerVR GE8320 GPU  உடன் கூடிய 2 ஜிபி ரேம் , 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் பெற்று 32 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டிருக்கும் என கருதப்படுகின்றது.