ஓப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின், ஏ5 மாடலை தொடர்ந்து ஓப்போ ஏ5எஸ் ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் டிஸ்பிளேவை பெற்று , பிரைமரி ஆப்ஷனில் டூயல் கேமரா கொண்டதாக அமைந்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஒப்போ A5s மாடலில் 4230mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு செயல்படுகின்றது. சில நாடுகளில் இந்த மாடல் ஒப்போ Ax5s என விற்பனை செய்யப்படுகின்றது.
ஒப்போ A5s ஸ்மார்ட்போன் நுட்பங்கள்
முந்தைய ஒப்போ ஏ5 மாடலை விட மேம்பட்ட மாடலாக வெளிவந்துள்ள இந்த போனில் வாட்டர் டிராப் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் போன்றவை மிகப்பெரிய அளவில் மாறுதலாக இரு மாடல்களுக்கு இடையில் கருதப்படுகின்றது. 6.2 அங்குல LCD (1520 x 720 pixels) 19:9 முழுவியூ 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன், மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் உடன் இயக்கப்பட்டு 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பை கொண்டு செயல்படுகின்றது.
இந்த போனின் மென்பொருள் சார்ந்த பிரிவில் ஆண்ட்ராய்டு 8.1 (Oreo) அடிப்படையில் கலர்ஓஎஸ் 5.2 கொண்டு இயக்கப்பட்டு, செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 8 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பிரைமரி ஆப்ஷனில் 13MP உடன் எல்இடி ஃபிளாஷ், f/2.2 துளை, கூடுலாக 2MP கேமரா f/2.4 துளை பெற்றுள்ளது.
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி பெறாத 4230mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டு , 4ஜி VoLTE, ஓய்-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, GPS + GLONASS, யூஎஸ்பி ஓடிஜி போன்ற கூடுதல் விருப்பங்களை கொண்டுள்ளது. ஓப்போ ஏ5எஸ் மாடலின் விலை மற்றும் வருகை பற்றி எந்த விபரமும் வெளியாகவில்லை.
OPPO A5s specifications
- 6.2 அங்குல (1520 x 720 pixels) 19:9 முழுவியூ 2.5D வளைந்த கிளாஸ்
- 2.3GHz ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ P35 (MT6765) 12nm பிராசெஸருடன் IMG PowerVR GE8320 GPU
- 3GB ரேம், 64GB சேமிப்பு வசதி, விரிவுப்படுத்த 256GB மைக்ரோ எஸ்டி
- ஆண்ட்ராய்டு 8.1 (Oreo) அடிப்படையில் கலர்ஓஎஸ் 5.2
- இரு சிம் கார்டு
- 13MP உடன் எல்இடி ஃபிளாஷ், f/2.2 துளை, கூடுலாக 2MP கேமரா f/2.4 துளை
- 8MP முன்புற கேமரா f/2.0 துளை
- அளவுகள்: 155.9×75.4×8.2mm; எடை: 170g
- 4ஜி VoLTE, ஓய்-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, GPS + GLONASS, USB OTG
- 4230mAh பேட்டரி