
ரூபாய் 15,490 விலையில் ஒப்போ A9 ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா வசதி கொண்டதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
OPPO A9 மொபைல் போன் மைக்கா கிரீன், ஜேட் வைட் மற்றும் ஃப்ளோரைட் பர்பிள் என மூன்று நிறங்களை பெற்று மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்துடன் 4020mAh பேட்டரி, 6.53 அங்குல டிஸ்பிளே ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றை பெற்றுள்ளது.
ஒப்போ ஏ9 மொபைல் 6.53 இன்ச் முழு எச்டி பிளஸ் டியூ டிராப் நாட்ச் டிஸ்ப்ளே உடன் 90.7% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தை பெற்றதாக வந்துள்ளது. இந்த மொபைலை இயக்க மீடியாடெக் ஹீலியோ P70 SoC உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு பெற்றுள்ளது. மைக்ரோ எஸ்.டி உடன் 256 ஜிபி வரை விரிவுப்படுத்தலாம். ஆண்ட்ராய்டு பை கலர் ஓ.எஸ் 6.0 உடன் இயங்குகின்றது.
16 மெகாபிக்சல் பின்புற கேமராவை AI காட்சி அங்கீகாரத்துடன் கூடுதலாக 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி மற்றும் வீடியோ கால் கேமரா இடம்பெற்றுள்ளது.
4,020mAh பேட்டரி உடன் VOOC 3.0 வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவையும் வழங்குகிறது. இணைப்பு விருப்பங்கள் புளூடூத் 4.2, 4ஜி எல்டிஇ ஆதரவு, வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் போன்றவை உள்ளது.
