ஒப்போ ஏ9எக்ஸ்

ஒப்போவின் முந்தைய ஒப்போ ஏ9 மாடலை விட மேம்பட்ட வதிகள் பெற்ற ஒப்போ A9x மொபைல் போன் சீன சந்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமரா கொண்டதாக விளங்குகின்றது.

சீனாவில் இந்த போனை A9x, 1,999 சீன யுவான்கள்( 20,200 ரூபாய்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  6GB ரேம் உடன் ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்தினை பெற்றுள்ளது.

ஒப்போ A9x சிறப்புகள்

வாட்டர் ட்ராப் நாட்ச் 6.5 இன்ச் FHD+ திரையை  கொண்ட இந்த போனில் 90.7 ஸ்கீரின் டூ பாடி விகிதம் கொண்டு பச்சை, வெள்ளை, மற்றும் ஊதா நிறங்களை கொணிடிருக்கும்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் பை இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P70 ஆக்டா-கோர் ப்ராசஸர் கொண்டு 6GB RAM + 128GB உள் சேமிப்பு கொண்டதாக செயல்படுகிறது. குறைந்த வெளிச்சம் உள்ள நிறங்களில் படிம்பிடிக்க ஏற்றதாக விளங்கும் கேமரா பிரிவில் பிரைமரி ஆப்ஷன் பெற்ற  48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டு பின்புற கேமரா கொண்டுள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என 16 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டதாக வழங்கப்பட்டுள்ளது. 4,020mAh பேட்டரி கொண்டு VOOC 3.0 செயல்படும் 20W வேக சார்ஜரை பெற்றுள்ளது.