oppo reno news in tamil

Oppo Reno: ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் அடுத்து அறிமுகம் செய்யப்பட உள்ள ரீனோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் 10ந் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ளது. ரீனோ மொபைல் போன் பிரீமியம் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கப் பெறலாம்.

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் அமைய உள்ள இந்த ஸ்மார்ட்போன்களில் பல்வேறு நவீன அம்சங்களுடன் ரினோ கலர்ஃபுல்லான மொபைல்களாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒப்போ ரீனோ ஸ்மார்ட்போன் பிராண்டு

இந்தியாவில் ஒப்போ நிறுவனம், ரியல்மி என்ற பட்ஜெட் பிராண்டினை அறிமுகம் செய்த விற்பனையில் சிறந்து விளங்கி வரும் நிலையில், ஏப்ரல் 10ந் தேதி வெளியிடப்பட உள்ள இந்த புதிய ரினோ ஸ்மார்ட்போனின் முதல் மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பெற்று, 10 மடங்கு துல்லியமான புகைப்படத்தை பெறும் நுட்பத்துடன், மற்றும் 4,065mAh பேட்டரி இடம் பெற்றிருக்கும் என முதற்கட்டமாக வெளியான தகவல்களில் தெரியவந்துள்ளது. ஆனால் அதிகார்வப்பூர்வமாக எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

புதிய ஒப்போ ரீனோ ஸ்மார்ட்போன் மாடல்கள் முதற்கட்டமாக சீனாவிலும், அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. அதே போல சமீபத்தில் விவோ நிறுவனம் ஐகியூ என்ற பிராண்டினை வெளியிட்டுள்ளது.

சீனாவின் பிபிகே எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற பிராண்டுகளில் மிக முக்கியமானவை பின் வருமாறு;- ஒப்போ, விவோ, ஒன்பிளஸ், விவோ ஐகியூ, ஒப்போ ரியல்மி மற்றும் புதிதாக வரவுள்ள ஒப்போ ரீனோ ஆகியவை உள்ளன.