ஒப்போ நிறுவனத்தின் புதிய எஃப்11 (Oppo F11) ஸ்மார்ட்போன் விலை 19,990 ரூபாய்க்கு இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. Oppo F11 மொபைலில் பாப் அப் செல்ஃபி கேமரா ஆப்ஷன் வழங்கப்படவில்லை. எஃப்11 ப்ரோ மாடலில் மட்டும் பாப் அப் 16 மெகா பிக்செல் கேமரா பெற்றுள்ளது.
வருகின்ற மார்ச் 15ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள புதிய ஒப்போ எஃப்11 ப்ரோ மற்றும் ஒப்போ எஃப்11 மாடல் அமேசான், ஃபிளிப்கார்ட் , ஸ்னாப்டீல் உள்ளிட்ட முன்னணி ஆன்லைன் மற்றும் ஒப்போ ஸ்டோர்கள் மற்றும் முன்னணி ஆஃபலைன் ரீடெயிலர்களிடமும் கிடைக்க உள்ளது.
Oppo F11 : விலை மற்றும் முக்கிய நுட்ப விபரங்கள்
6.53 அங்குல முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி திரையை கொண்டு 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்றதாகவும் 90.90 பாடி டூ ஸ்கீரின் விகிதாசாரத்தை பெற்றுள்ளது. இந்த மொபைல் போன் பர்பிள் மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும்.
மீடியாடெக் நிறுவனத்தின் ஹீலியோ பி70 சிப்செட் கொண்டதாக இயக்கப்படுகின்ற இந்த போனில் 4 ஜிபி ரேம் கொண்டு 128 ஜிபி சேமிப்பு வசதியை பெற்றதாக வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை பின்பற்றி செயல்படும் கலர்ஓஎஸ் 6 இடம்பெற்றிருக்கின்றது.
Oppo F11 போனின் கேமரா பிரிவில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் சேவைக்கு கேமராவில் 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக 48 எம்பி சென்சாருடன் சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டு கூடுதலாக 5 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. வெளிச்சம் குறைவான நேரங்களில் சிறப்பான புகைப்படத்தை பெற ஒப்போ எஃப் 11 கேமரா உதவியாக அமைந்திருக்கும்.
ஒப்போவின் VOOC ஃபிளாஷ் 3.0 அதிவிரைவு சார்ஜரை பெற்றுள்ள இந்த போனில் 4,020mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலில் கூடுதல் விருப்பங்களாக 4G எல்டிஇ, Wi-Fi 5, ப்ளூடூத் 4.2, GPS/ A-GPS, மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது. Oppo F11 ஸ்மார்ட்போன் விலை 19,990 ரூபாய் ஆகும்.