ரூ.27,990க்கு ஒப்போ F11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் அறிமுகம்

பிரபலமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் அடிப்படையில் ஒப்போ F11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் சிறப்பு பதிப்பு இன்றைக்கு விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது. சாதாரன ஒப்போ எஃப்11 ப்ரோ மாடலை விட ஸ்டைலிஷான் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.3,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியா தளத்தில் மே 1 ஆம் தேதி முதல் இந்த பிரத்தியேக பதிப்பு விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஒப்போ எஃப்11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் விலை ரூ.27,990 ஆகும்.

ஒப்போ F11 ப்ரோ அவெஞ்சர்ஸ் பதிப்பு

மலேசியா சந்தையில் அறிவிக்கப்பட்ட சிறப்பு OPPO F11 Pro Marvel’s Avengers லிமிடெட் எடின் மாடலில் பாக்சில் தெர்மல் பிரின்ட் செய்யப்பட்ட அவெஞ்சர்ஸ் லோகோ, ஸ்டேம்படு கலெக்ட்ரஸ் பேட்ஜ், சிறப்பு பரிசுகள் என பல்வேறு அம்சங்களை இந்த சிறப்பு பதிப்பு மொபைல் உள்ளடக்கியதாக இருக்கின்றது.

நீல நிறத்தினை கொண்டதாக அமைந்துள்ள இந்த பேனல்களில் சிவப்பு நிற அவஞ்சர்ஸ் லோகோ பதிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் பாப் அப் செல்ஃபி ரக கேமராவில் 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக 48 எம்பி சென்சாருடன் சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டு கூடுதலாக 5 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது.

ரூ.27,990க்கு ஒப்போ F11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிடெட் எடிஷன் அறிமுகம்

6.53 அங்குல முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி திரையை கொண்டு 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்றதாகவும் 90.90 பாடி டூ ஸ்கீரின் விகிதாசாரத்தை பெற்றுள்ளது. மீடியாடெக் நிறுவனத்தின் ஹீலியோ பி70 சிப்செட் கொண்டதாக இயக்கப்படுகின்ற 6 ஜிபி ரேம் கொண்டு 128 ஜிபி சேமிப்பு பெற்றுள்ளது.