ஒப்போ எஃப்11 ப்ரோ

ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் ஒப்போ எஃப்11 ப்ரோ மொபைல் போன் இன்று முதல் ஒப்போ ஸ்டோர், ஆன்லைன் வலைதளங்கள் மற்றும் நாட்டில் உள்ள முன்னணி ரீடெயிலர்களிடம் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற ஒப்போ F11 ப்ரோ  மாடலில் ஹீலியோ பி70 சிப்செட் கொண்டு விரைவாக சார்ஜிங் ஆகின்ற VOOC ஃபிளாஷ் 3.0 வசதியுடன் கூடிய  4,000mAh பேட்டரி பெற்றுள்ளது.

oppo f1 pro smartphone launched

ஒப்போ எஃப்11 ப்ரோ சிறப்புகள்

பாப்-அப் செல்பி எனப்படுகின்ற மேல் எழும்பி படம்படிக்கின்ற வகையிலான 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக 48 எம்பி சென்சாருடன் சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டு கூடுதலாக 5 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. வெளிச்சம் குறைந்த மற்றும் இரவு நேரங்களில் சிறப்பான புகைப்படத்தை பெற ஒப்போ எஃப்11 ப்ரோ கேமரா உதவியாக அமைந்திருக்கும்.

6.53 அங்குல முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி திரையை கொண்டு 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்றதாகவும் 90.90 பாடி டூ ஸ்கீரின் விகிதாசாரத்தை பெற்றுள்ளது.  இந்த மொபைல் போன் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும்.

oppo f1 pro

மீடியாடெக் நிறுவனத்தின் ஹீலியோ பி70 சிப்செட் கொண்டதாக இயக்கப்படுகின்ற இந்த போனில் 6 ஜிபி ரேம் கொண்டு 128 ஜிபி சேமிப்பு வசதியை பெற்றதாக வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை பின்பற்றி செயல்படும் கலர்ஓஎஸ் 6 இடம்பெற்றிருக்கின்றது.

ஒப்போ எஃப்11 ப்ரோ (Oppo F11 Pro) மாடல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியை பெற்று விலை 24,990 ரூபாய்க்கு கிடைக்கின்றது.

oppo-f11-pro-vs-vivo-v15-pro-compare