oppo f1 pro smartphone launched

பாப் அப் செல்ஃபி கேமராவுடன் ஒப்போ எஃப் 11 ப்ரோ (Oppo F11 Pro) ஸ்மார்ட்போன் 24,990 ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. விவோ வி15 ப்ரோ மாடலை விட குறைந்த விலையில் பாப் செல்ஃபி கேமராவை பெற்று விளங்கும் ஒப்போ எஃப் 11 ப்ரோவில் 16 எம்பி சென்சார் செல்ஃபிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற இந்த போனில் பிரைமரி ஆப்ஷனில் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டு மிக நேர்த்தியான நாட்ச் லெஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. கூடுதலாக இந்த நிகழ்வில் ஒப்போ எஃப் 11 (Oppo F11) மாடலின் விலையும் 19,990 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எஃப்11 மாடலின் விற்பனை தேதி வெளியாகவில்லை.

oppo f11 pro smartphone news in tamil

Oppo F11 Pro சிறப்புகள் மற்றும் வசதிகள்

சமீபத்தில் வெளியான பாப் அப் செல்ஃபி கேமரா பெற்ற மொபைல் மாடல்களை விட குறைந்த விலையில் இந்த போன் அமைந்திருக்கின்றது. ஓப்போ எஃப்11 ப்ரோ போனில் 6.53 அங்குல முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி திரையை கொண்டு 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்றதாகவும் 90.90 பாடி டூ ஸ்கீரின் விகிதாசாரத்தை பெற்றுள்ளது.  இந்த மொபைல் போன் கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும்.

மீடியாடெக் நிறுவனத்தின் ஹீலியோ பி70 சிப்செட் கொண்டதாக இயக்கப்படுகின்ற இந்த போனில் 6 ஜிபி ரேம் கொண்டு 128 ஜிபி சேமிப்பு வசதியை பெற்றதாக வந்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை பின்பற்றி செயல்படும் கலர்ஓஎஸ் 6 இடம்பெற்றிருக்கின்றது.

oppo f11 pro

கேமரா பிரிவில் குறிப்பாக பாப் அப் செல்ஃபி ரக கேமராவில் 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக 48 எம்பி சென்சாருடன் சோனி  IMX586 சென்சார் வழங்கப்பட்டு கூடுதலாக 5 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. வெளிச்சம் குறைவான நேரங்களில் சிறப்பான புகைப்படத்தை பெற ஒப்போ எஃப் 11 ப்ரோ கேமரா உதவியாக அமைந்திருக்கும்.

VOOC ஃபிளாஷ் 3.0 விரைவு சார்ஜரை பெற்றுள்ள இந்த போனில் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலில் கூடுதல் விருப்பங்களாக 4G எல்டிஇ, Wi-Fi 5, ப்ளூடூத் 4.2, GPS/ A-GPS, மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளது.

ஒப்போ எஃப்11 ப்ரோ (Oppo F11 Pro) மாடல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியை பெற்று விலை 24,990 ரூபாய்க்கு கிடைக்க உள்ளது. இந்த மாடல் மார்ச் 15ந் தேதி முதல் அனைத்து முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ரீடெயிலர்களிடம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

oppo f1 pro smartphone specs

Oppo F11 ஸ்மார்ட்போனின் சிறப்புகள் மற்றும் வசதிகள்

ரூபாய் 19,990 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஓப்போ எஃப்11 (Oppo F11) போனில் அதே எஃப்11 ப்ரோ அம்சத்தை பெற்றிருந்தாலும் பாப் அப் செல்ஃபி கேமரா இடம்பெறாமல் சாதாரண 16 எம்பி கேமரா உள்ளது. மற்றொரு மிக முக்கியமான மாற்றம் இந்த போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியை பெற்று 4,020mAh பேட்டரியுடன் பர்பிள் அல்லது நீலம் நிறங்களில் கிடைக்க உள்ளது.

oppo f1 smartphone specs