வருகின்ற மார்ச் 5ம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஓப்போ எஃப்11 ப்ரோ (Oppo F11 Pro) மொபைல் போன் தொடர்பான முக்கிய விவரங்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றது.

மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசெஸருடன், ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி மற்றும் கலர் ஓஎஸ் 6 தளத்தில் செயல்படுவதுடன் மிக விரைவான சார்ஜிங் அம்சத்தை கொண்ட 4,000mAh பேட்டரியை ஓப்போ எஃப்11 ப்ரோ பெற்றிருக்கும்.

ஓப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்புகள் மற்றும் படங்கள்

சமீபத்தில் பல்வேறு விபரங்கள் இந்த மொபைல் போன் தொடர்பாக வெளியாகியுள்ளது. இவற்றை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம். இந்த போனில் முழுமையான காட்சி திரை கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

6.5 இன்ச் FHD+ (2340×1080 pixels) LTPS LCD திரையை பெற்று 90.9% ஸ்கீரின் டூ பாடி விகிதாசரத்தை கொண்ட இந்த போனில் கொண்டிருப்பதுடன் மீடியாடெக் ஹீலியோ பி70 பிராசெஸரை பெற்று 6 ஜிபி ரேம் கொண்டு 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி இரு மாறுபாட்டில் வரவுள்ளது.

இந்த போனில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக டூயல் கேமரா சென்சார்கள் 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் இடம்பெற்றிருக்கலாம். இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பாப் செல்ஃபி இந்த மொபைலில் வேறு பெயருடன் 16 எம்பி சென்சார் இடம்பெற்றிருக்காம்.

4,000mAh பேட்டரியுடன் VOOC 3.0 சார்ஜிங் வசதியும் உள்ளது. VOOC என்றால், Voltage Open Loop Multistep constant Current Charging ஆகும். ஓப்போ எஃப் 11 ப்ரோ போனில் கூடுதல் ஆதரவாக வை-ஃபை 802.11 a/b/g/n/ac dual-band, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் A-GPS, GLONASS, மற்றும் BeiDou போன்றவை கொண்டிருக்கும்.

அதிகார்வப்பூர்வமான மேலதிக விபரங்கள் மார்ச் 5 ஆம் தேதி மாலை 7.00 மணிக்கு விற்பனைக்கு வெளியிடப்படும் போது அறிந்து கொள்ளலாம்.