இந்தியாவில் விற்பனக்கு புதிய ஒப்போ F11 ப்ரோ மொபைல் போன் 48 மெகாபிக்சல் கேமரா டூயல் கேமரா செட்டப் பெற்றதாக விரைவில் வெளியிடப்பட உள்ளது. ஒப்போ எஃப்11 ப்ரோ இரவு நேரங்களிலும் தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவு செய்யும் திறன் கொண்டதாக விளங்கும்.

ஒப்போ F11 ப்ரோ மொபைல்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவின் ஒப்போ நிறுவனம் அபரிதமான வளர்ச்சி பெற்று வருகின்றது. ரியல்மி , ஒப்போ என இரு பிராண்டுகளில் மொபைல் போன்களை விற்பனை செய்யப்படுகின்றது. சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த இன்-டிஸ்பிளே கைரகை சென்சாருடன் கூடிய ஒப்போ கே1 பிளிப்கார்டில் ரூ.16,990 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த வருடம் வெளிப்பட்ட ஒப்போ எஃப் 9 ப்ரோ வெற்றிய தொடர்ந்து குறைந்த வெளிச்சம் உள்ள நேரங்களில் சிறப்பான புகைப்படம் பெறும் வகையிலான புதிய ஒப்போ எஃப் 11 ப்ரோ போனில் 48 மெகாபிக்சல் கேமராவுடன் கூடிய டுயல் கேமராவினை பெற்றிருக்கும் என தனது அதிகிர்வப்பூர்வ டிவிட்டர் டீசரில் குறிப்பிட்டுள்ளது.

6.4 திரை விகிதம் கொண்டு உயர்ரக புகைப்படங்கள் பெற இரட்டை கேமரா செட்டப், முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 25 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்த சில வாரங்களுக்குள் வெளிவரவுள்ள ஒப்போ F11 ப்ரோ பிப்ரவரி 22ந் தேதி அறிமுகமாகலாம். விரைவாக அறிவிக்கப்பட உள்ளது. இந்தியாவில் 48 மெகாபிக்சல் கேமரா தொட்பான மோகத்தை சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 வாயிலாக பெரிதும் எதிர்பார்க்க வைத்துள்ளது. இந்த மாடல் பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியாக உள்ளது.