Oppo F11 Pro vs Vivo V15 Pro: பாப் அப் செல்ஃபி கேமராவை பெற்ற இரு மாடல்களை ஒப்பீட்டு , ஒப்போ எஃப்11 ப்ரோ Vs விவோ வி15 ப்ரோ என எந்த போனில் சிறந்த வசதிகள் உள்ளது என்பதனை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.
குறிப்பாக ஒப்போ எஃப்11 ப்ரோ மாடலில் 16 எம்பி சென்சாரும், விவோ வி15 ப்ரோ மாடலில் 32 எம்பி பாப் அப் செல்ஃபி கேமரா அமைந்துள்ளது. ஒப்போ எஃப்11 மாடலில் பாப் அப் செஃபி இடம்பெறவில்லை. ஆனால் வி15 மாடலில் பாப் அப் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இரு மாடல்களும் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியை பெற்றுள்ளது.
ஒப்போ எஃப்11 ப்ரோ Vs விவோ வி15 ப்ரோ
விவோ வி15 ப்ரோ மாடலில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை பெறுவதற்கு என பிரத்தியேகமாக மேல் எழும்பி படம் பிடிக்கும் திறன் பெற்ற பாப் அப் செல்ஃபி கேமரா 32எம்பி சென்சாருடன் அமைந்துள்ளது. பிரைமரி கேமரா பிரிவில் 48 எம்பி, 8எம்பி மற்றும் 5 எம்பி என மொத்தம் மூன்று கேமராவை கொண்டுள்ளது.
கேமரா பிரிவில் குறிப்பாக பாப் அப் செல்ஃபி ரக கேமராவில் 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இதில் பிரைமரி கேமரா ஆப்ஷனாக 48 எம்பி சென்சாருடன் சோனி IMX586 சென்சார் வழங்கப்பட்டு கூடுதலாக 5 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது. வெளிச்சம் குறைவான நேரங்களில் சிறப்பான புகைப்படத்தை பெற ஒப்போ எஃப்11 ப்ரோ கேமரா உதவியாக அமைந்திருக்கும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற விவோ வி15 ப்ரோவில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் கொண்ட எஃப்11 ப்ரோ போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு பெற்றுள்ளது. இரு மாடல்களிலும் 256 ஜிபி வரை மெமரி கார்டு கொண்டு நீட்டிக்கலாம்.
ஒப்போ எஃப்11 ப்ரோவில் 6.53 அங்குல முழு ஹெச்டி பிளஸ் எல்சிடி திரையை கொண்டு 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்தை பெற்றதாகவும் உள்ள இந்த போனின் 90.90 பாடி டூ ஸ்கீரின் விகிதாசாரத்தை பெற்றுள்ளது. இந்த மொபைல் போன் கருப்பு மற்றும் பச்சை என இரு நிறத்தில் கிடைக்கும். வி15 ப்ரோவில் 6.39 அங்குல முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினை கொண்டு கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது.
VOOC ஃபிளாஷ் 3.0 விரைவு சார்ஜரை பெற்றுள்ள இந்த போனில் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. புதிய வி15 ப்ரோவில் 3700mAh பேட்டரி உடன் விரைவாக சார்ஜிங் ஆகின்ற வசதி கொண்டுள்ளது.
Oppo F11 Pro vs Vivo V15 Pro – வித்தியாசங்கள்
நுட்பம் | Oppo F11 Pro | Vivo V15 Pro |
டிஸ்பிளே | 6.5-inch FHD+LCD டிஸ்பிளே | 6.39-inch FHD+ AMOLED டிஸ்பிளே |
பிராசஸர் | ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 | ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675 |
ரேம் | 6GB ரேம் | 6GB ரேம் |
சேமிப்பு | 64GB | 128GB |
ரியர் கேமரா | 48 MP கேமரா & 5MP கேமரா | 48 MP கேமரா. 8MP & 5MP கேமரா |
முன் கேமரா | 16MP | 32MP |
பேட்டரி | 4000mAh (Gadgets Tamilan) | 3700mAh |
ஓஎஸ் | ஆண்ட்ராய்டு 9 பை | ஆண்ட்ராய்டு 9 பை |
நிறம் | நீலம் மற்றும் கருப்பு | நீலம் மற்றும் சிவப்பு |
விலை | 6GB+64GB – ரூ.24,990 | 6GB+128GB – ரூ.28,990 |