செப்டம்பர் 2.., ஓப்போ F17, ஓப்போ F17 புரோ விற்பனைக்கு அறிமுகமாகிறது

இந்தியாவில் ஓப்போ F17 மற்றும் ஓப்போ F17 புரோ என இரு ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஒப்போ எஃப் 17 புரோ மாடல் 7.48 மிமீ மெல்லியதாக (“sleekest phone of 2020”) அமைந்திருக்கும் என்று இந்நிறுவனம் செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 7:00 மணி முதல் சமூக ஊடக சேனல்கள் மற்றும் யூடியூபில் வெளியீட்டு நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பவுள்ளது.

இரு மாடல்களிலும் எதிர்பார்க்கப்படுகின்ற நுட்பவிபரங்களின் விபரம் பின் வருமாறு;-

ஓப்போ எஃப் 17 நுட்பவிபரம்

ஓப்போ எஃப் 17 மாடல் ஃபுல் எச்டி+ 6.44 இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா பின்புறத்தில், குவாட்-கேமரா அமைப்பு அமைப்பினை கொண்டிருக்கும். 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 16 எம்பி சென்சாருடன், 4,000mAh பேட்டரியில் விரைவாக சார்ஜிங் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை பெற்றிருக்கும்.

ஓப்போ எஃப் 17 புரோ நுட்பவிபரம்

அடுத்ததாக வெளியிடப்பட உள்ள ஓப்போ எஃப்17 புரோவில், 6.43 இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா பின்புறத்தில், குவாட்-கேமரா அமைப்பு அமைப்பினை கொண்டு 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான டூயல் கேமரா பெற்று 16 எம்பி சென்சாருடன் 2 எம்பி ஃபீல்ட் சென்சாரும் இடம்பெற்றிருக்கும். 4,000mAh பேட்டரியில் விரைவாக சார்ஜிங் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை பெற்றிருக்கும். டாப் மாடல் 8GB ரேம் கொண்டதாக விளங்கலாம்.