முதல் முதலாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 6-களுடன் வெளிவரும் ஓப்போ

தங்களது அதிநவீன தொழில்நுட்பமான கொரில்லா கிளாஸ் 6-ஐ பயன்படுத்தும் முதல் நிறுவனமாக, பிரபல மொபைல் டிவைஸ் தயாரிப்பு நிறுவனமாக ஓப்போ மாறியுள்ளது என்று சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான கார்னிங் அறிவித்துள்ளது.

ஓப்போ நிறுவனத்தின் ஒப்புதலை தொடர்ந்து வரும் வாரங்களில் வெளியாகும் மொபைல்கள் கொரில்லா கிளாஸ் 6 நவீன தொழில்நுட்பத்துடன் வெளி வர உள்ளது என்று கார்னிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதிருந்து, எதிர்வரும் ஓப்போ ஸ்மார்ட் போன்களான எப்9, எப்9 புரோ அல்லது ஆர்17 மொபைல்கள் கார்னிங் நிறுவனத்தின் புதிய கிளாஸ்களுடன் வெளி வர உள்ளது.

முதல் முதலாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 6-களுடன் வெளிவரும் ஓப்போ

லேப் டெஸ்டில் இந்த கொரில்லா கிளாஸ் 6, மோசாமான தரையில் ஒரு மீட்டர் உயரத்தில் இருந்து 15 முறை கீழே விழுந்த போதும் உடையாமல் இருந்துள்ளது. இதே போன்றே சோடா லைம் மற்றும் அலுமினிநோசாலிகேட் ஆகியவற்றில் இந்த சோதனை மேற்கொண்ட போது முதல் முறையிலேயே உடைந்தது.

எங்கள் நிறுவன கிளாஸ்களை பயன்படுத்தி கொள்ள ஓப்போ நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கார்னிங் கொரில்லா கிளாஸ் நிறுவன துணை தலைவர் மற்றும் பொது மேலாளர் ஜான் பேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் கொரில்லா கிளாஸ் 6, அறிமுகம் செய்யப்பட்டது முதல் நிறுவனத்தின் அதிக நாட்கள் நீடிக்கும் கவராக இந்த கிளாஸ் கவர் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் முதலாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 6-களுடன் வெளிவரும் ஓப்போ

மேலும் அவர், ஓப்போ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக வெளியிட உள்ள மாடல்களில் இந்த கிளாஸ் 6-ஐ பயன்படுத்த உள்ளது. இந்த மூலம் ஒவ்வொரு பகுதியையும் டிஜிட்டலாக்க விரும்பும் ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

45 பெரிய நிறுவனங்களின் ஆறு பில்லியனுக்கும் மேற்பட்ட கருவிகளை கொண்டு கொரில்லா கிளாஸ் வடிவமைக்கப்படுகிறது.

கொரில்லா கிளாஸ் 6 புதிய வடிவமைப்பில், ஆப்டிகல் தெளிவு, தொடு உணர்திறன், ஸ்டிரச் ரெஜிஸ்டன்ஸ், திறமையான வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் மேம்பட்ட தன்மை ஆகியவற்றை கொண்டுள்ளதால், இந்த கிளாஸ்கள் டிரெண்டிங் ஆகி வருகிறது.