ரூ.16,990 விலையில் ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்போ K1 மொபைலில் 4 ஜிபி ரேம் உடன் கூடிய 64 ஜிபி உள்ளடக்க மெமரி பெற்றதாக ஃபிளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்குளூசிவாக கிடைக்க உள்ளது.

பிப்ரவரி 12ந் தேதி முதல் ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் ஆன்லைன் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்த மாடல் நீலம் மற்றும் சிவப்பு ஆகிய இரு நிறங்களில் வெளியாகியுள்ளது.

இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார் எனப்படுகின்ற டிஸ்பிளேவில் உள்ள கைரேகை சென்சார் மற்றும் வாட்டர் டிராப் டிஸ்பிளே கொண்டதாக கே1 மொபைலில் 6.4 அங்குல ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு 2340×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது. இந்த போனில் டிஸ்பிளவை பாதுகாக்க 2.5D வளைந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 அம்சம் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையில் கலர் ஓஎஸ் கொண்ட ஒப்போ K1 போனில், ஆக்டா-கோர்  ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் பிராசெஸரை கொண்ட 4ஜிபி ரேம் இரு மாறுபாட்டில் 64 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டிருக்கின்றது.  கூடுதலாக மைக்ரோ எஸ்டி மெமரி மூலம் அதிகபட்சமாக 256ஜிபி வரை நீட்டிக்கலாம்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்துடன் f/2.0 துளை கொண்ட 25எம்பி செல்ஃபீ கேமரா பொருத்தப்பட்டுள்ளது, பின்புறத்தில் 16 எம்பி மற்றும் 2எம்பி டூயல் ரியர் கேமரா  f/1.7 துளை பெற்று மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவை கொண்டுள்ளது.

ஒப்போ கே1 போனில் 3600 mAh பேட்டரி உடன் 4G, VoLTE, 3G, வை-ஃபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகளை பெற்று விளங்க உள்ளது.