ஒப்போவின் கே1 மொபைல் போன் விற்பனைக்கு வருகின்றது

வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள 6.4 அங்குல ஒப்போ கே1 மொபைலில் உள்ள சில முக்கிய வசதிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். ஃபிளிப்கார்ட் இ-காமர்ஸ் தளத்தில் ஒப்போ K1 பிரத்தியேகமாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் சீனாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற இந்த கே1 மொபைல் போன் இந்திய சந்தையில் ரூ.20,000 விலைக்குள் நீலம் மற்றும் சிவப்பு ஆகிய இரு நிறங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் எனப்படுகின்ற டிஸ்பிளேவில் உள்ள கைரேகை சென்சார், மற்றும் வாட்டர் டிராப் டிஸ்பிளே உடன் K1 மொபைலில் 6.4 அங்குல ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு 2340×1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் கொண்ட இந்த போனில் டிஸ்பிளேவினை பாதுகாக்க 2.5D வளைந்த கார்னிங் கிளாஸ் அம்சம் இடம்பெற்றுள்ளது.

ஒப்போவின் கே1 மொபைல் போன் விற்பனைக்கு வருகின்றது

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையில் கலர் ஓஎஸ் கொண்ட ஒப்போ K1 போனில், ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் உடன் 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் இரு மாறுபாட்டில் 64 ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டிருக்கின்றது.  கூடுதலாக மைக்ரோ எஸ்டி மெமரி மூலம் அதிகபட்சமாக 256ஜிபி வரை நீட்டிக்கலாம்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்துடன் 25எம்பி செல்ஃபீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்புறத்தில் 16எம்பி மற்றும் 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவை கொண்டுள்ளது.

ஒப்போவின் K1 போனில் 3600 mAh பேட்டரி உடன் 4G, VoLTE, 3G, வை-ஃபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகளை பெற்று விளங்க உள்ளது. மேலதிக விபரங்கள் மற்றும் விலை பிப்ரவரி 6ந் தேதி வெளியாகும்.

ஒப்போவின் கே1 மொபைல் போன் விற்பனைக்கு வருகின்றது