Oppo K3 Smartphone
Oppo K3 Smartphone

ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின், முதல் கே சீரிஸ் மொபைல் மாடலாக விற்பனைக்கு வரவுள்ள ஒப்போ K3 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டில் பாப் அப் செல்ஃபி கேமரா கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பாப்-அப் கேமரா, முழு காட்சி டிஸ்பிளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் உட்பட பல்வேறு அம்சங்களுடன் போனின் ஸ்டைலின் பெரும்பகுதி இந்நிறுவனத்தின் பிரீமியம் ரெனோ ஸ்மார்ட்போனில் இருந்து பெற்றுள்ளது. இந்தியாவின் அமேசான் தற்றத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில்  ஊதா மற்றும் பச்சை நிறத்திலான கிரேடியண்ட் ஃபினிஷ் மாடல்கள் காணப்படுகின்றது.

சீனாவில், ஒப்போ கே3 விலை மொபைலின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கான RMB 1,599 (தோராயமாக ரூ. 16,000) என தொடங்குகிறது. இந்தியாவில் இதேபோன்ற விலையில் நிறுவனம் இதை அறிமுகப்படுத்தக்கூடும். ஆனால், அமேசான் இந்தியாவின் பட்டியலில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டை மட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் ஒரு மாடல் மட்டும் கிடைக்க உள்ளதாக தெரிகின்றது.

ஒப்போ கே 3 மொபைல் 6.5 அங்குல AMOLED ஃபுல் ஹெச்டி டிஸ்பிளேவுடன் 2340 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் மோட்டார் பொருத்தப்பட்ட பாப்-அப் செல்பி கேமரா எஃப் / 1.7 துளை கொண்டதாக இருக்கும் என கருதப்படுகின்றது.

ஒப்போ கே3 குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 SoC மூலம் இயக்கப்பட்டு 8 ஜிபி ரேம் ஆப்ஷனை பெற்று ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தில் செயல்படுவதுடன், பிரைமரி ஆப்ஷனில்  இரட்டை கேமரா செட்டப் பெற்று 16 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாருடன் வரவுள்ளது.

20W VOOC 3.0 வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 3,765mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிற ஒப்போ K3 போனில்  வைஃபை, புளூடூத், ஜி.பி.எஸ், 4 ஜி எல்டிஇ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற வசதிகளுடன் ஜூலை 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.