ஒப்போ ஆர்17 ப்ரோ போனுக்கு 6000 ரூபாய் விலை குறைப்பு

இந்திய மொபைல் போன் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஒப்போ ஆர்17 ப்ரோ மாடலுக்கான விலை 6,000 ரூபாய் வரை குறைக்கப்பட்டு, தற்போது ஆர் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் அமேசானில் ரூபாய் 39,990க்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

ஆன்லைன் மட்டுமல்லாமல் ஆஃப்லைனிலும் விலை குறைக்கப்பட்டுள்ள ஆர்17 ப்ரோ மாடல் கடந்த டிசம்பர் மாதம் ரூபாய் 45,990 என்ற விலையில் ஓப்போவின் ஆர்17 ப்ரோ வெளியிடப்பட்டது.

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் அமைப்புகள்

ரூபாய் 6,000 விலை நேரடியாகவும், அதிகபட்சமாக எக்ஸ்சேஞ்ஜ் முறையில் போன் வாங்குபவர்களுக்கு ரூ.13,400 வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ள R17 ப்ரோ போனில் 6.4 இஞ்ச் ஹெச்டி திரையை பெற்று 1080×2340 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டு AMOLED உடன் கூடுதலாக திரை பாதுகாப்பினை உறுதி செய்ய கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 இணைக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை பின்பற்றி கலர்ஓஎஸ் 5.1-ல் செயல்படும் ஒப்போ ஆர்17 ப்ரோ போனில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸ்ருடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பை கொண்டு இயங்குவதுடன் இநத போனில் மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் ஒதுக்கப்படவில்லை.

மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற சூப்பர் VOOC ஞ ஃபிளாஷ் சார்ஜர் அம்சத்துடன் கூடிய 3,700mAh பேட்டரி பெற்று கேமரா பிரிவில் R17 ப்ரோ மாடலில் மூன்று கேமராக்கள் பிரைமரியில் வழங்கப்பட்டுள்ளது. 12 மெகா பிக்சல் சென்சார், 20 மெகா பிக்சல் சென்சாருடன் கூடுதலாக Time of Flight (TOF) 3D சென்சாரும் இணைக்கப்பட்டுள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 25 மெகா பிக்சல் சென்சாரை கொண்டுள்ளது. இந்த போனில் கூடுதல் விருப்பங்களாக டூயல் 4ஜி வோல்டிஇ, வை-ஃபை , ப்ளூடுத் 5.0 உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது.