ஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான பிரசத்தி பெற்ற ஒப்போ நிறுவனம், இந்தியாவில் புதிய ரியல்மீ (RealMe) என்ற பிராண்டினை அறிமுகம் செய்து, முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரியல்மீ 1 மொபைல் போனை ரூ. 8,990 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மீ 1 ஸ்மார்ட்போன்

ஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

ஒப்போ நிறுவனத்தின் புதிய ரியல்மீ பிராண்டு பட்ஜெட் ரக மாடல்களை மட்டும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது ரூ.15,000 மற்றும் அதற்கு குறைந்த விலை கொண்ட மொபைல் போன் மாடல்களில் பிரிமியம் அம்சங்களை பெற்றதாக இந்த மொபைல்கள் பவர் மற்றும் ஸ்டைல் அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக விளங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ரியல்மீ 1 மொபைல் போனில் உள்ள 12-அடுக்கு நானோடெக் மெட்டீரியல் மூலம் செய்யப்பட்ட ஒரு பளபளப்பான மேற்பரப்பை கொண்ட டயமண்ட் பிளாக் பூச்சினை பெற்றதாக வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்,  6 அங்குல முழு எச்டி+ திரையை கொண்டு  மீடியா டெக் ஹெலியோ பி60 சிப்செட் மூலம் இயக்கப்பட்டு 3ஜிபி ரேம், 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என மொத்தமாக மூன்று விதமான ரேம் மாறுபாடுகளில் கிடைக்கின்றது.

ஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி கலர் OS 5.0 இயங்குதளத்தை பெற்ற இந்த போனில் 3410mAh பேட்டரி ஆனது செயற்கை நுண்ணிறிவு சார்ந்த அம்சங்களை பெற்றிருப்பதனால்  சிறப்பான பேட்டரி திறன் மற்றும் கூடுதலான நேரம் தாக்குப்பிடிக்கும்.

கேமரா பிரிவில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றுகின்றது. குறிப்பாக இந்த மொபைல் போனின் 13 மெகாபிக்சல் பின் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா என இரண்டும் 296 முகவியில் புள்ளிகளை கணக்கில் கொண்டு புகைப்படங்களை பதிவு செய்யும் திறன் கொண்டதாக செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்டு இரட்டை 4ஜி சிம் கார்டு ஆதரவுடன் மெம்ரி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

Realme 1 3GB+32GB – ரூ. 8,990

Realme 1 4GB+64GB – 10,990

Realme 1 6GB+128GB – ரூ. 13,990

ஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது

டையமன்ட் பிளாக் மற்றும் சோலார் ரெட் என இரு நிறங்களில் கிடைக்க உள்ள இந்த போனில் கைரேகை சென்சார் பேஸ் அன்லாக உள்ளிட்ட அம்சங்களை பெற்று விங்குகின்றது. இந்தியாவில் பிரத்தியேகமாக அமேசான் இந்தியா தளத்தில் பகல் 12 மணிக்கு கிடைக்கின்றது.

ஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது