உலகின் முதல் 44 மெகாபிக்சல் டூயல் பஞ்சு ஹோல் கேமராவை கொண்ட ஒப்போ ரெனோ 3 புரோ மாடல் இந்தியாவில் ரூ.29,990 ஆரம்ப விலையில் 8GB+128GB கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்படுடள்ளது. இன்று முதல் பிரீ புக்கிங் தொடங்கப்பட உள்ள இந்த மாடலுக்கு விற்பனைக்கு மார்ச் 6 ஆம் தேதி துவங்கப்பட உள்ளது.
6.4 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரையுடன் சூப்பர் அமோல்ட் உடன் 20:9 ஆஸ்பெக்ட் விகித்துடன் டூயல் பஞ்சு ஹோல் கேமரா, இன் டிஸ்பிளே கைரேகை சென்சாரை பெற்றுள்ளது. மீடியாடெக் ஹீலியோ P95 சிப்செட் கொண்டுள்ள இந்த மாடலில் 8 ஜிபி ரேம் உடன் 128GB/256GB இரு மெமரி ஆப்ஷனுடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
ரெனோ 3 புரோ மாடலில் குவாட் கேமரா செட்டப்பில் 64 எம்பி ப்ரைமரி சென்சார்,13 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ், 8 எம்பி அல்டரா வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் தேவைக்கு என டூயல் பஞ்சு ஹோல் பெற்ற 44 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 2 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
4025mAh பேட்டரியுடன் விரைவு சார்ஜர், டூயல் 4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போன்றவை உள்ளது.
ஓப்போ ரெனோ 3 புரோ மாடல் 8GB+128GB கொண்ட வேரியண்ட் விலை ரூ.29,990 மற்றும் 8GB+256GB பெற்ற மாடல் ரூ.32,990 என நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மற்றும் பிற ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என அனைத்திலும் மார்ச் 6 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.