ஒப்போ ரெனோ 4 புரோ எம்.எஸ் தோனி எடிசன் விற்பனைக்கு அறிமுகம்

ஐபிஎல் 2020 போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் எம்.எஸ் தோனி கையொப்பம் அடங்கிய ஒப்போ ரெனோ 4 புரோ சிறப்பு எடிசனை ரூ.34,990 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி ஃபிளிப்கார்ட் மூலம் வாங்கலாம்.

OPPO ரெனோ 4 புரோ ஸ்மார்ட்போனில் 6.5 அங்குல FHD + AMOLED டிஸ்ப்ளே உடன் 1,080 x 2,400 பிக்சல் தீர்மானத்துடன், 90Hz ரிஃபெரஷ் ரேட் கொண்டு, 20:9  விகிதம் மற்றும் 402 பிபி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 720ஜி மூலம் இயகப்பட்டு 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் கிடைக்கின்றது.

ஒப்போ ரெனோ 4 புரோ 48MP (f / 1.7) சோனி IMX586 முதன்மை சென்சார், 8MP (f / 2.2) அல்ட்ரா-வைட் சென்சார், 2MP மோனோ லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ ஆகியவற்றை பெற்ற குவாட் செட்டப் கேமராக்களைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு, முன்பக்கத்தில் 32MP சோனி IMX616 சென்சார் உள்ளது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் கலர்ஓஎஸ் 7.2 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் உடன் இணைப்பு அம்சங்களில் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆகியவை உள்ளது.