oppo reno series

ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின், ஒப்போ ரெனோ, ஒப்போ ரெனோ 10x சூம் என இரு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஷார்க் ஃபின் ரைசிங் செல்ஃபி கேமரா பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மிகவும் ஸ்டைலிஷான் இந்த மொபைல் போன் மாடலில் டிரிப்ள் கேமரா செட்டப் பெற்றுள்ளது. அமேசான் இந்தியா, ஃபிளிப்கார்ட், பேடிஎம் மால் உட்பட பல்வேறு முன்னணி ஆன்லைன் ஸ்டோர்கள் போன்றவற்றில் விற்பனைக்கு ஜூன் 7 ஆம் தேதி முதல் கிடைக்க உள்ளது.

ஒப்போ ரெனோ சிறப்புகள்

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை பெற்ற ஒப்போ ரெனோ போனில் 6.4 அங்குல முழு ஹெச்டி திரையை கொண்ட நாட்ச் பெறாமல் உள்ள போனின் 2340 x 1080 பிக்சல் தீர்மானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனில் திரையை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 உடன், ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் உடன் கூடிய 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என இரு மாறுபாட்டில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரு உள் சேமிப்பு வகையில் கிடைக்கும்.

48 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. இந்த கேமராவுக்கு ஆதரவாக டூயல் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய ஷார்க் ஃபின் ஸ்டைல் 16 மெகாபிக்சல் செனசார் கொண்டிருக்கின்றது. 18 வாட்ஸ் ரேபிட் சார்ஜிங் உடன் கூடிய 3,700mAh பேட்டரி கொண்டதாக விற்பனைக்கு வரவுள்ளது.

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் விலை 6ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்டு விலை ரூபாய் 32,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

reno 10x zoom

ஒப்போ ரெனோ 10x சூம் சிறப்புகள்

Oppo Reno 10x Zoom கேமரா நுட்பத்தை கொண்ட மாடலில் 6.65 அங்குல முழு ஹெச்டி திரையை எவ்விதமான நாட்ச் பெறாமல் உள்ள போனின் 2340 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்டு 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் திரையை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 வழங்கப்பட்டுள்ளது.

உயர் ரக ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் கூடிய 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என இரு மாறுபாட்டில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரு உள் சேமிப்பு வகையில் கிடைக்கும்.

reno-pop-up-camera

பிரைமரி ஆப்ஷனில் சோனி IMX586 சென்சாருடன் கூடிய 48 மெகாபிக்சல் கேமரா, 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் பெரிஸ்கோபிக் சென்சார் கொண்டுள்ளது. இந்த கேமராவுக்கு ஆதரவாக டூயல் எல்இடி ஃபிளாஷ் மற்றும் லேசர் ஃபோகஸ் உள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செனசார் கொண்டிருக்கின்றது. VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,065mAh பேட்டரி கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் கேமிங் சார்ந்த செயற்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் டச்பூஸ்ட், ஃபிரேம் பூஸ்ட் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

Oppo Reno 10x Zoom Edition

ஒப்போ ரெனோ 10x Zoom ஸ்மார்ட்போன் விலை 6ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்டு விலை ரூபாய் 39,990, மற்றும் 8ஜிபி ரேம் உடன் 256 ஜிபி சேமிப்பு கொண்டு விலை ரூபாய் 49,990  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்