ஒப்போ ரெனோ

ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பாளின், புதிய ஒப்போ ரெனோ, ஒப்போ ரெனோ 10x Zoom எடிஷன் என இரு மொபைல் போன் மாடல்களும் விற்பனைக்கு சைனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று ஐரோப்பாவில் இரு மாடல்களுடன் கூடுதலாக ஒப்போ ரெனோ 5ஜி வெளியாகியுள்ளது.

இந்திய சந்தையில் புதிய ரெனோ வரிசை மொபைல்கள் ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளதாக 91 மொபைல்ஸ் வலைதளம் குறிப்பிட்டுள்ளது.

ஒப்போ ரெனோ, ரெனோ 10x Zoom

சீன சந்தையில் மே 10, 2019 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள புதிய ஒப்போ ரெனோ , ரெனோ 10x ஜூம் பதிப்பானது. இந்திய சந்தையில் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

ஸ்வைப் வடிவில் மேலே எழும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாப் அப் செல்ஃபி கேமராவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பிரைமரி ஆப்ஷனில்

ஒப்போ ரெனோ 10x சூம் எடிஷன் மாடலில் பிரைமரி ஆப்ஷனில் சோனி IMX586 சென்சாருடன் கூடிய 48 மெகாபிக்சல் கேமரா, 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் பெரிஸ்கோபிக் சென்சார் கொண்டுள்ளது. இந்த கேமராவுக்கு ஆதரவாக டூயல் எல்இடி ஃபிளாஷ் மற்றும் லேசர் ஃபோகஸ் உள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செனசார் கொண்டிருக்கின்றது.

மேலும் வாசிக்க – ஒப்போ ரெனோ வரிசை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்

ஒப்போ ரெனோ & ரெனோ 10x Zoom விலை பட்டியல்

  • 6 GB RAM + 128GB storage – 2,999 Yuan (ரூ.30,900)
  • 6 GB RAM + 256 GB storage – 3,299 Yuan (ரூ.34,000)
  • 8 GB RAM + 256 GB storage – 3,599 Yuan (ரூ.37,000)

OPPO Reno 10x Zoom விலை

  • 6 GB RAM + 128GB storage – 3,999 Yuan (ரூ.41,100)
  • 6 GB RAM + 256 GB storage 4,499 Yuan (ரூ.46,350)
  • 8 GB RAM + 256 GB storage – 4,799 Yuan (ரூ.49,500)

இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக தொகுக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் ஒப்போ ரெனோ, ரெனோ 10x Zoom எடிஷன் இந்தியாவில் அறிமுகம்