ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்

வரும் மே 28 ஆம் தேதி ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ரெனோ மற்றும் ஒப்போ ரெனோ 10x சூம் எடிஷன் என இரு மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. 5ஜி ஆதரவை பெற்ற ஒப்போ ரீனோ இந்தியாவில் வெளியிடப்பட வாய்ப்புகள் இல்லை.

சில வாரங்களுக்கு முன்பாக சீன சந்தை மற்றும் ஐரோப்பாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்ற ரெனோ சீரிஸ் போன்கள் இந்தியாவில் 31,000 ரூபாய் விலையில் விற்பனைக்கு வரலாம்.

ஒப்போ ரெனோ, ரெனோ 10x சூம் சிறப்புகள்

ரெனோ 10x சூம் கேமரா நுட்பத்தை கொண்ட மாடலில் 6.65 அங்குல முழு ஹெச்டி திரையை எவ்விதமான நாட்ச் பெறாமல் உள்ள போனின் 2340 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்டு 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் டிஸ்பிளேவினை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 அம்சம் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் கூடிய 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என இரு மாறுபாட்டில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரு உள் சேமிப்பு வகையில் கிடைக்கும்.

reno 10x zoom

ரெனோ 10x சூம் மாடலில் பிரைமரி ஆப்ஷனில் சோனி IMX586 சென்சாருடன் கூடிய 48 மெகாபிக்சல் கேமரா, 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் பெரிஸ்கோபிக் சென்சார் கொண்டுள்ளது. இந்த கேமராவுக்கு ஆதரவாக டூயல் எல்இடி ஃபிளாஷ் மற்றும் லேசர் ஃபோகஸ் உள்ளது. மேலே ஸ்வைப்பிங் வகையில் எழும்பும் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செனசார் கொண்டிருக்கின்றது.

VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,065mAh பேட்டரி கொண்டுள்ளது.

ஒப்போ ரெனோ ஸ்டாண்டர்டு

6.4 அங்குல முழு ஹெச்டி திரையை எவ்விதமான நாட்ச் பெறாமல் உள்ள போனின் 2340 x 1080 பிக்சல் உடன் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் உடன் கூடிய 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என இரு மாறுபாட்டில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி கொண்டு 48 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. இந்த கேமராவுக்கு ஆதரவாக டூயல் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செனசார் கொண்டிருக்கின்றது. 18 வாட்ஸ் ரேபிட் சார்ஜிங் உடன் கூடிய 3,700mAh பேட்டரி உள்ளது.

முழுமையான விபரங்கள் – ரெனோ சீரிஸ் போனின் சிறப்புகள்

oppo reno series