ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்

10x ஆப்டிக்கல் ஜூம் நுட்பம், ஸ்லைடிங் போன்ற பாப் அப் செல்ஃபி கேமரா என ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனில் பல்வேறு நவீத்துவமான டெக்னாலாஜி வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இன்றைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ரெனோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம். வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி ஜூரிச் நகரில் சர்வதேச அளவில் விற்பனைக்கு ரினோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் அறிமுக விழாவை பார்ப்பது எவ்வாறு ?

இன்று சீனா நேரப்படி 2pm CST (இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு ) அறிமுகம் செய்யப்படுகின்றது. புதிய ரெனோ சீரிஸ் போன் அறிமுகத்தை நிகழ் நேரலையில் காண்பதற்க்கு ஒப்போ நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் இந்த பக்கத்தை பின்பற்றவும்– > https://hd.opposhop.cn/2019/Reno/index.html

ஒப்போ ரெனோ பற்றி பல்வேறு முக்கிய விபரங்கள் முன்பே வெளிவந்துள்ள நிலையில், குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மிகவும் ஸ்டைலிஷான முறையில் பாப் அப் செல்ஃபி கேமராவை எல்இடி ஃபிளாஷ் ஆதரவுடன் வடிவமைத்திருக்கும் என உறுதி செய்யபட்டுள்ளது.

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனின் சிறப்புகள்

6.4 இன்ச் முழு ஹெச்டி பிளஸ் திரையை பெற்று 2340×1080 பிக்சல் தீர்மானத்தை கொண்டு குவால்காம் நிறுவன ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் மற்றும் டாப் மாடலில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும்.

PCAM00 மற்றும் PCAT00 என தரச்சான்றிதழ் வழங்கும் தளங்களின் தகவல் குறிப்பில் இந்த மொபைல்களுக்கான குறீயிட்டு பெயர்கள் அமைந்துள்ளன. இதில் குறிப்பாக கேமரா சார்ந்த அமைப்பில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 எம்பி உடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக இருக்கலாம்.

பிரைமரி சென்சார் பிரிவில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.25″ சோனி IMX586, 0.8um பிக்சல் மற்றும் உடன் 5 மெகாபிக்சல் இரண்டாவது பிரைமரி கேமரா சென்சார் இணைக்கப்பட்டிருக்கும். இந்த போனில் 50 வாட்ஸ் முறையில் விரைவான சார்ஜிங் ஏற வழிவகுக்கும் 3680mAh பேட்டரி இடம்பெற்றிருக்கும்.

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு இன்று அறிமுகமாகிறது

அடுத்து உயர் ரக ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட மாடலில் 10X ஹைப்ரிட் சூம் கொண்ட மூன்று பிரைமரி சென்சார் பெற்ற மாடலாகவும் ஒரு வகை விற்பனைக்கு கிடைக்கும் என கருதப்படுகின்றது.

ஒப்போ ரெனோ ஸ்டான்டர்டு எடிஷன் மற்றும் ஒப்போ ரெனோ 10x Zoom எடிஷன் என இரு பெயர்களில் வெளியிடப்படும். மேலும் 5ஜி ஆதரவை பெற்ற ரெனோ போன்கள் ஏப்ரல் 24-ல் வெளியாகலாம்.

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு இன்று அறிமுகமாகிறது