ஒப்போ ரெனோ & ரெனோ 10x Zoom ஸ்மார்ட்போன் அறிமுகம் - Oppo Reno

சீனாவில் ஒப்போ நிறுவனம், இன்றைக்கு புதிய ஒப்போ ரெனோ ஸ்டாண்டர்ட் மற்றும் ஒப்போ ரெனோ 10x Zoom என இரு ஸ்மார்ட்போன் மாடல்களை $446 (இந்திய மதிப்பில் ரூ.30,900) தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ரெனோ மற்றும் ரெனோ 10x சூம் என இரு மாடல்களும் முழுமையான காட்சி திரை பெற்று பாப் அப் செல்பி கேமரா, லிக்யூடு கூலிங் டெக்னாலாஜி, அதிகபட்சமாக 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி கொண்டதாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ & ரெனோ 10x Zoom ஸ்மார்ட்போன் சிறப்புகள்

10 மடங்கு புகைப்பட்டதை பெரிதாக்கினாலும் எந்தவொரு காட்சி சிதைவும் இல்லாமல் வழிவகுக்கும் ஒப்போ நிறுவனத்தின் 10x Zoom கேமரா நுட்பத்தை கொண்ட மாடலில் 6.65 அங்குல முழு ஹெச்டி திரையை எவ்விதமான நாட்ச் பெறாமல் உள்ள போனின் 2340 x 1080 பிக்சல் தீர்மானம் கொண்டு 7000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனில் திரையை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 அம்சம் கொண்டுள்ளது.

ஒப்போ ரெனோ & ரெனோ 10x Zoom ஸ்மார்ட்போன் அறிமுகம் - Oppo Reno

குவால்காம் நிறுவனத்தின் உயர் ரக சிப்செட் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் கூடிய 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என இரு மாறுபாட்டில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரு உள் சேமிப்பு வகையில் கிடைக்கும்.

கேமரா பிரிவில் ஒப்போ ரெனோ 10x சூம் மாடலில் பிரைமரி ஆப்ஷனில் சோனி IMX586 சென்சாருடன் கூடிய 48 மெகாபிக்சல் கேமரா, 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் பெரிஸ்கோபிக் சென்சார் கொண்டுள்ளது. இந்த கேமராவுக்கு ஆதரவாக டூயல் எல்இடி ஃபிளாஷ் மற்றும் லேசர் ஃபோகஸ் உள்ளது.

செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செனசார் கொண்டிருக்கின்றது.

ஒப்போ ரெனோ & ரெனோ 10x Zoom ஸ்மார்ட்போன் அறிமுகம் - Oppo Reno

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி கலர் ஓஎஸ் 6 கொண்டு இயக்கப்படுகின்ற இந்த ஸ்மார்ட்போனில்  VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,065mAh பேட்டரி கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் கேமிங் சார்ந்த செயற்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் டச்பூஸ்ட், ஃபிரேம் பூஸ்ட் போன்றவை உள்ளது.

OPPO Reno 10x Hybrid Optical Zoom Edition specifications

 • 6.6-inch (2340 × 1080 pixels) Full HD+ 19:5:9 aspect ratio AMOLED, Corning Gorilla Glass 6 protection
 • ஸ்னாப்டிராகன் 855 7nm Mobile Platform (1 x 2.84GHz Kryo 485 + 3 x 2.42GHz Kryo 485 + 4x 1.80GHz Kryo 485) with Adreno 640 GPU
 • 6GB / 8GB LPDDR4X ரேம் 128GB உள் சேமிப்பு , 8GB LPDDR4X ரேம் உடன் 256GB உள் சேமிப்பு
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் ColorOS 6.0
 • இரட்டை சிம் கார்டு
 • 48MP ரியர் கேமரா 1/2.25″ Sony IMX586 sensor, f/1.7 aperture, 13MP பெரிஸ்கோபிக் டெலிபோட்டோ லென்ஸ், f/3.0 aperture, 8MP 120° அல்ட்ரா வைட் ஏங்கிள் with f/2.2 aperture, 10x Hybrid Optical Zoom
 • 16MP செல்பி கேமரா, f/2.0 துவாரம், 79.3° wide angle lens
 • இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
 • USB Type-C audio, Hi-Res audio, Dolby Atmos, , மூன்று மைக்ரோபோன்
 • அளவிகள்: 162.0×77.2×9.3mm; எடை:210g
 • டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11ac dual-band (2×2 MU-MIMO ), Bluetooth 5, Dual-frequency (L1+L5) GPS/GLONASS/Beidou, NFC, USB Type-C
 • 4065mAh பேட்டரி VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ ரெனோ & ரெனோ 10x Zoom ஸ்மார்ட்போன் அறிமுகம் - Oppo Reno

குறைந்த விலை ஒப்போ ரெனோ ஸ்டாண்டர்ட் விபரம்

6.4 அங்குல முழு ஹெச்டி திரையை எவ்விதமான நாட்ச் பெறாமல் உள்ள போனின் 2340 x 1080 பிக்சல் தீர்மானத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனில் திரையை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 அம்சம் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் உடன் கூடிய 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என இரு மாறுபாட்டில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரு உள் சேமிப்பு வகையில் கிடைக்கும். ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி கலர் ஓஎஸ் 6 கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மாடலில் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

48 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. இந்த கேமராவுக்கு ஆதரவாக டூயல் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செனசார் கொண்டிருக்கின்றது. 18 வாட்ஸ் ரேபிட் சார்ஜிங் உடன் கூடிய 3,700mAh பேட்டரி உள்ளது.

OPPO Reno Standard Edition specifications

 • 6.4 அங்குல (2340 × 1080 pixels) முழு ஹெச்டி பிளஸ் 19:5:9 aspect ratio AMOLED திரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
 • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm Mobile Platform (Dual 2.2GHz Kryo 360 + Hexa 1.7GHz Kryo 360 CPUs) with Adreno 616 GPU
 • 6GB / 8GB LPDDR4X ரேம் 128GB உள் சேமிப்பு , 8GB LPDDR4X ரேம் உடன் 256GB உள் சேமிப்பு
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் ColorOS 6.0
 • இரட்டை சிம் கார்டு
 • 48MP கேமரா உடன் Sony IMX586 sensor, 0.8um pixel size, f/1.7 துவாரம், PDAF, CAF, 5MP துனை கேமரா f/2.4 துவாரம்
 • 16MP செல்பி கேமரா, f/2.0 துவாரம், 79.3° wide angle lens
 • இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
 • 3.5 mm ஆடியோ ஜாக், Hi-Res audio, Dolby Atmos
 • அளவுகள்: 156.6×74.3×9.0mm; எடை:185g
 • டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, GPS/GLONASS, NFC, USB Type-C
 • 3700mAh  பேட்டரி உடன் VOOC 3.0 18 வாட்ஸ்

ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்

ஒப்போ ரெனோ & ரெனோ 10x Zoom விலை பட்டியல்

 • 6 GB RAM + 128GB storage – 2,999 Yuan (ரூ.30,900)
 • 6 GB RAM + 256 GB storage – 3,299 Yuan (ரூ.34,000)
 • 8 GB RAM + 256 GB storage – 3,599 Yuan (ரூ.37,000)

OPPO Reno 10x Zoom விலை

 • 6 GB RAM + 128GB storage – 3,999 Yuan (ரூ.41,100)
 • 6 GB RAM + 256 GB storage 4,499 Yuan (ரூ.46,350)
 • 8 GB RAM + 256 GB storage – 4,799 Yuan (ரூ.49,500)

இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக தொகுக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி ஸ்விட்சர்லாது நாட்டில் ஒப்போ ரெனோ 5ஜி மொபைல் உட்பட இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியாகலாம்.

ஒப்போ ரெனோ & ரெனோ 10x Zoom ஸ்மார்ட்போன் அறிமுகம் - Oppo Reno