Oppo Reno Z

சீனாவின் ஒப்போ ஸ்மார்ட்போன் தயாரிப்பளரின், ரெனோ சீரிஸ் போனில் அடுத்தப்படியாக ஒப்போ ரெனோ Z என்ற பெயரில் அதிகபட்சமாக 8ஜிபி ரேம் கொண்டதாக விற்பனைக்கு சீனாவில் ஜூன் 6ந் தேதி முதல் கிடைக்க உள்ளது.

இந்தியாவில் ஒப்போ ரெனோ மற்றும் ஒப்போ ரெனோ 10X சூம் என இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செயப்பட்டுள்ளது. வரும் ஜூன் 7 முதல் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ரீடெயிலர்களிடம் கிடைக்க உள்ள ரெனோ ஸ்மார்ட்போன் விலை 6ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்டு விலை ரூபாய் 32,990 எனவும், ரெனோ 10x Zoom ஸ்மார்ட்போன் விலை 6ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு கொண்டு விலை ரூபாய் 39,990, மற்றும் 8ஜிபி ரேம் உடன் 256 ஜிபி சேமிப்பு கொண்டு விலை ரூபாய் 49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ Z ஸ்மார்ட்போன்

சீனா உட்பட சில நாடுகளில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஒப்போ ரெனோ இசட் ஸ்மார்ட்போன் விலை ரூபாய் 25,270 என இந்திய மதிப்பில் கிடைக்க உள்ளது. இந்தியாவில் இந்த மொபைல் அறிமுகம் குறித்தான எந்த தகவலும் இல்லை.

6.4 அங்குல திரையுடன் (2340 × 1080 பிக்சல்ஸ்) முழு HD+ உடன் 19:5:9 ஆஸ்பெக்ட் விகிதம் AMOLED HDR திரையை பெற்ற இந்த போனில் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ P90 பிராசெஸருடன் கூடிய 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் கொணடு 256 ஜிபி மற்றும் 128 ஜிபி என முறையே உள் சேமிப்பை கொண்டதாக விளங்குகின்றது.

பிரைமரி கேமரா ஆப்ஷனில் டூயல் கேமரா செட்டப் பெற்றுள்ளது. 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 எம்பி கேமரா ஆகியவற்றை பெற்றுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி 4035mAh பேட்டரி உடன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்றதாக ரெனோ இசட் விளங்குகின்றது.

Oppo Reno Z

OPPO Reno Z specifications

  • 6.4-inch (2340 × 1080 pixels) முழு HD+ 19:5:9 AMOLED HDR திரை
  • ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ P90 12nm பிராசெஸர் (Dual 2.2GHz Cortex-A75 + Hexa 2GHz Cortex-A75 CPUs) உடன் IMG PowerVR GM 9446 GPU
  • 6GB LPDDR4X RAM உடன் 256GB உள்சேமிப்பு / 8GB LPDDR4X RAM with 128GB உள் சேமிப்பு
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் கலர்ஓஎஸ் 6.0
  • இரட்டை சிம்
  • 48MP ரியர் கேமரா உடன் எல்இடி ஃபிளாஷ், 1/2.25″ சோனி IMX586 சென்சார், 0.8um pixel size, f/1.7 aperture, PDAF, CAF, 5MP இரண்டாவது கேமரா f/2.4 aperture
  • 32MP முன்புற கேமரா
  • இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
  • 3.5 mm ஆடியோ ஜாக், Hi-Res audio, டால்பி ஆடோம்ஸ்
  • டூயல் 4G VoLTE, ஒய்ஃபை 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, GPS/GLONASS, NFC, USB Type-C
  • 4035mAh பேட்டரி உடன் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்