சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஒப்போ, ஸ்மார்ட்போன் திரையின் கீழ் பகுதியில் (Under-Screen Camera) செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என கேமரா ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் காரணமாக முழுமையான காட்சி திரையை பெற வழி வகுத்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக டீசர் வாயிலாக திரைக்கு பின்பகுதியில் செயல்படும் கேமராவினை ஒப்போ மற்றும் சியோமி நிறுவனங்கள் சோதித்து வருவதாக டீசரை வெளியிட்டிருந்தன. தற்போது முதன்முறையாக ஒப்போ இதனை வெளியிட்டு முதல் டெமோவை ஷாங்காய் MWC அரங்கில் வழங்க உள்ளது.
திரைக்கு அடியில் செல்ஃபி கேமரா
ஒப்போ இந்தியா டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள டிவிட்டில் இந்த மொபைல் செல்ஃபி கேமரா பிரிவில் எவ்வாறு செயல்படும் என்பதனை விளக்கும் வகையில் அமைந்திருக்கும். அதாவது வழங்கப்பட்டுள்ள காட்சி திரை அமைப்பு வெளிப்படையான பொருளைப் ( transparent material) பயன்படுத்துகிறது. இதற்கு மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பிக்சல் முறையில், இதனால் ஒளி கேமராவைப் பெற முடியும், மேலும் இதற்கான சென்சார் மற்ற செல்ஃபி கேமராக்களை விட மிகவும் திறன் வாய்ந்த பெரியதாக விளங்கும்.
விரைவில், வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு வெளியிட உள்ள இந்த நுட்பம் மிக சிறப்பான வகையில் காட்சி திரை வழங்குவதுடன், செல்ஃபி கேமரா சார்ந்த அம்சம் மற்றும் டிஸ்பிளே ஆகியவற்றில் எந்த சமரசமும் செய்துக் கொள்ளாமல் விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்த நுட்பம் ஒப்போ ரெனோ சீரிஸ் போன்களில் பயன்படுத்தப்படலாம்.
OPPO's brand new solution for full-screen display – Under-screen Camera (USC) has just been unveiled here at #MWC19 Shanghai! #MoreThanTheSeen pic.twitter.com/k5qEQ3QNta
— OPPO India (@oppomobileindia) June 26, 2019