ஒர்மியோ ப்ளூடூத் இயர்போன்கள் அறிமுகம்

உங்கள் பயணத்தின் போது, மியூசிக் தேவைகளுக்காக, ஸ்டைலான மற்றும் நீடித்து உழைக்கும் ப்ளூடூத் இயர்போன்கள் தேடி வருகிறீர்களா? உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய ஒர்மியோ (oraimo) ப்ளூடூத் இயர்போன்கள் அறிமுகம் செய்துள்ளது.

சிரான்சின் ஹோல்டிங் நிறுவனத்தின் ஸ்மார்ட் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் பிராண்டான ஒர்மியோ, புதிய ப்ளூடூத் இயர்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சார்க் OEB-E57D இயர்போன்கள், 2,399 ரூபாயில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒர்மியோ ப்ளூடூத் இயர்போன்கள் அறிமுகம்

இதுகுறித்து பேசிய ஒர்மியோ அசிஸ்சொரிஸ் இந்தியாவின் தலைமை அதிகாரி புனேத் குப்தா, புதிய டிரெண்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயர்போன்கள், இளைய தலைமுறையை வெகுவாக கவரும் என்று தெரிவித்துள்ளார்

ஒர்மியோ ப்ளூடூத் இயர்போன்கள், பிளாஸ்டிக் மெட்டல் கலந்த கலவையாக இருக்கும். லேசாகவும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். இயர்போன்களின் டாக்டைம் 8 மணி நேரம் வரையில் இருக்கும். இந்த இயர்போன்களை, ப்ளூடூத் வெர்சன் V 4.1 டிவைஸ்கள் மற்றும் ஸ்மார்ட் டிவைஸ்களில் எளிதாக கனெக்ட் செய்ய முடியும்