பேனாசோனிக்  எலுகா ரே 600 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ .7,999

தனது பெரிய டிஸ்பிளே சிரீஸ்களை விரிவுபடுத்தும் நோக்கில் பேனாசோனிக் இந்தியா நிறுவனம் தனது புதிய எலுகா ரே 600 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 5.99 இன்ச் HD+ IPS டிஸ்பிளே உடன் நாளை (11.10.2018) முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ள இந்த பேனாசோனிக் எலுகா ரே 600 ஸ்மார்ட்போன்களின் விலை 7 ஆயிரத்து 999 ரூபாயாகும்.

இந்த டிவைஸ் 1.3GHz குவாட்கோர் பிராசசர்களுடன், 3GB ரேம் மற்றும் 32 GB இன்டர்னல் மெம்மரியை கொண்டுள்ளது. இந்த மெம்மரியை 128GB அளவுக்கு விரிவு படுத்தி கொள்ள முடியும்.

பேனாசோனிக்  எலுகா ரே 600 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ .7,999

இந்த பேனாசோனிக் எலுகா ரே 600 ஸ்மார்ட்போன் குறித்து பேனாசோனிக் நிறுவன மூத்த இயக்குனர் அயப்பன் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய ஸ்மார்ட் போன் பல்வேறு வசதிகளை கொண்டதோடு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன்கள் எங்கள் வாடிக்கையாளர்களை இந்த விழாக்கால சீசனில் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்று உறுதியாக நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பேனாசோனிக்  எலுகா ரே 600 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ .7,999

பேனாசோனிக் எலுகா ரே 600 ஸ்மார்ட்போன்களில் ஸ்போர்ட்ஸ் 13MP ஆட்டோ போக்கஸ் ரியர் கேமரா மற்றும் 8 MP பிராண்ட் கேமராகள் மற்றும் பிளாஷ் உளது. டூயல் சிம் கொண்ட இந்த டிவைசில் 4,000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதோடு, ஆண்டிராய்டு 8.1.0 ஓரியோ ஆபரேடிங் சிஸ்டமில் இயக்கும்.