panasonic-eluga-ray-800-launched

9,999 ரூபாய் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய பானாசோனிக் எலுகா ரே 800 (Panasonic Eluga Ray 800) ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு வசதியை பெற்று 13 எம்பி கேமராவை பெற்றதாக வந்துள்ளது.  இந்த போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

பானாசோனிக் நிறுவனம் மொபைல் போன் தயாரிப்பில் மிக தீவராக செயல்படுவது இல்லை என்பதே உண்மை. சமீபத்தில் வெளிவந்த மற்ற மொபைல்கள் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் டுயல் கேமரா செட்டப் பெற்றிருந்தாலும், ஒரு ரியர் கேமரா , ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

பானாசோனிக் எலுகா ரே 800 போனின் சிறப்புகள்

எலுகா ரே 800 போனில் 5.5 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 1920×1080 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டதாகவும், பெயர் குறிப்பிடப்படாத ஆக்டோ கோர் சிப்செட்டை பெற்று 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டதாக உள்ளது. கூடுதலாக சேமிப்பை விரிவுப்படுத்த 128 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

பானாசோனிக் எலுகா ரே 800 ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் கேமரா மற்றும் AI ஆதரவை பெற்ற 8 மெகாபிக்சல் சென்சார் உடன் ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த போனில் 4000 மில்லிஆம்பியர் பேட்டரியை பெற்று கைரேகை சென்சார் டூயல் சிம் 2G/2.5G/3G/4G LTE, வை-ஃபை மற்றும் ப்ளூடூத் போன்றவை பெற்றுள்ளது.

ரூபாய் 9,999 விலையில் பானாசோனிக் எலுகா ரே 800 போன் கிடைக்க உள்ளது. ஆனால் சமீபத்தில் வெளியான ரியல்மி 3 டுயல் கேமரா பெற்ற மாடல் ரூபாய் 8,999 மற்றும் ரெட்மி நோட் 7 மாடல் ரூபாய் 9,999 என விற்பனை செய்யப்படுகின்றது.