பானாசோனிக் பி55 மேக்ஸ் என்ற பெயரில் 5000mAh பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை ரூ. 8,499 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

5000mAh பேட்டரி திறன் கொண்ட பானாசோனிக் P55 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

பானாசோனிக் P55 மேக்ஸ்

சமீபத்தில் வெளிவந்த மோட்டோ இ4 பிளஸ் மொபைலுக்கு நேரடியான போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பானாசோனிக் P55 மேக்ஸ் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

5.5 அங்குல IPS ஹெச்டி தரத்தை கொண்ட திரையை பெற்றதாக வந்துள்ளது. மிக சிறப்பான தரத்தை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் மல்டி டாஸ்க் மற்றும் மல்டி விண்டோஸ் போன்றவற்றுடன் மேட் கருப்பு மற்றும் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.

5000mAh பேட்டரி திறன் கொண்ட பானாசோனிக் P55 மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

பிராசஸர் & ரேம்

1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர் பெற்ற இந்த மொபைலில் மீடியாடெக் MT6737 பிராசஸருடன் கூடிய 3 ஜி.பி ரேம் வழங்கப்பட்டு 16 ஜி.பி வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் கூடுதலாக 128 ஜி.பி வரை நீட்டிக்க இயலும் வகையில் மைக்ரோ எஸ்டி அட்டை பி55 மேக்ஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா துறையில் குவாட் எல்இடி ஃபிளாஷ் , ஆட்டோஃபோகஸ்,  f/2.2 போன்றவற்றுடன் கூடிய மிக தெளிவான படங்களை வெளிப்படுத்தும் 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ளும் வகையில் படங்களை பெற 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற பானாசோனிக் P55 மேக்ஸ் மொபைலில் 5,000mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றது.

மற்றவை

வைபை, புளூடுத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், 4G LTE ஆதரவு போன்றவற்றை கொண்டதாகவும் உள்ளது. மேலும்  ஜியோ சிம் பயனாளர்களுக்கு 30ஜிபி கூடுதல் டேட்டா மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

விலை

ரூ. 6,999 விலையில் கிடைக்க உள்ள மைக்ரோமேக்ஸ் பானாசோனிக் P55 மேக்ஸ் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதற்கு மோட்டோ இ4 பிளஸ் மொபைல் மிகுந்த சவாலாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here