பானாசோனிக் P90 மொபைல் விற்பனைக்கு வெளியானது

இந்திய தொடக்க நிலை மொபைல் சந்தையில் புதிதாக ரூ.5599 விலையில் பானாசோனிக் P90 ஸ்மார்ட்போன் பல்வேறு நவீன வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பி90 மொபைல் 1 ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுவதுடன் 5 மெகாபிக்சல் கேமரா கொண்டு இயக்கப்படுகிறது.

பானாசோனிக் P90

பானாசோனிக் P வரிசை பட்ஜட் ரக  மொபைல்களில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள P90 மொபைலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சத்துடன் 4ஜி எல்டிஇ ஆதரவை பெற்றதாக அமைந்துள்ள பானாசோனிக் பி90 நாடு முழுவதும் உள்ள மொபைல் ரீடெய்லரிடம் விற்பனைக்கு கிடைக்கின்றது.

பானாசோனிக் P90 5 அங்குல காட்சித்திரையுடன் 720 x 1280 பிக்சல் தீர்மானத்தைப் பெற்று 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் கூடிய கார்னிங் கொரில்லா கிளாஸ் நுட்பத்துடன் மீடியாடெக் MT6737 சிப்செட்டுடன் 1 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளீட்டு சேமிப்பு பெற்று விளங்குகின்றது. கூடுதலாக 128 ஜிபி வரை சேமிப்பு திறனை மைக்ரோ எஸ்டி கார்டு கொண்டு விரிவுபடுத்தலாம்.

பி90 மொபைலில் பிரைமரி மற்றும் செல்பி கேமரா என இரண்டும் எல்இடி பிளாஸ் உடன் 5மெகா பிக்சல் சென்சாரைப் பெற்றுள்ளது. 2400mAh பேட்டரி கொண்ட இந்த மொபைலில் 4G LTE (including Band 40), Wi-Fi, ப்ளூடூத் 4.0, எஃப்எம் ரேடியோ, GPS/ A-GPS போன்ற அம்சங்களை பெற்றுள்ளது.