ரூ. 3999-க்கு பானாசோனிக் P95 ஸ்மார்ட்போன் அறிமுகம்

குறைந்த விலை ஸ்மார்ட்போன் வரிசையில் பானாசோனிக் நிறுவனம் அதிரடியாக குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் பெற்ற பானாசோனிக் P95 ஸ்மார்ட்போன் மாடலை ரூ. 3999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பானாசோனிக் P95

வருகின்ற 13 -16 வரை நடைபெற உள்ள பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே சேல் நாட்களில் மட்டும் ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.3999 க்கு இந்த மொபைல் போன் கிடைக்கப்பெறும், பொதுவாக இந்த மொபைல் போன் விலை ரூ.4999 ஆகும்.

5 அங்குல காட்சி திரையை பெற்று விளங்கும் பானாசோனிக் பி95 மொபைல் 720×1280 பிக்சல் தீர்மானத்தை கொண்டு குவால்காம் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட் கொண்டு 1ஜிபி ரேம் பெற்று 16ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் விளங்குகின்றது. மேலும் சேமிப்பு திறனை 128 ஜிபி வரை விரிவாக்க மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு நௌகட் 7.1.1 இயங்குதளத்தை பின்பற்றி இந்த போனில் 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பு கேமரா வழங்கப்பட்டுள்ளது. zero shutter lag நுட்பத்தை கொண்டு வந்துள்ளதால் படங்கள் மிக தெளிவாக பதிவு செய்யலாம்.

இந்த மொபைல் போனில் 4ஜி, வை-ஃபை, ப்ளூடுத், எஃப்எம் ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் 2300mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

பானாசோனிக் பி95 மொபைல் விலை ரூ. 4,999 ஆகும். சிறப்பு சலுகையாக பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டே சேல் விற்பனையை முன்னிட்டு ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.3,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

Comments are closed.