Poco M2 Pro
Poco M2 Pro Price In India

சியோமியின் கீழ் செயல்படுகின்ற போக்கோ மொபைல் தயாரிப்பாளரின் எம்2 புரோ மாடலில் 4ஜிபி, 6ஜிபி என இரு விதமான ரேம் பெற்று மூன்று வேரியண்டில் ரூ.13,999 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

மிக சிறப்பான கேமிங் அனுபவத்தினை வழங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள எம்2 புரோ மாடல் 6.7 அங்குல் முழு ஹெச்டி+ 20:9 சினிமேட்டிக் திரையை கொண்டதாக அமைந்துள்ளது. டிஸ்பிளேவினை பாதுகாக்க மிக சிறப்பான கார்னிரிங் கொரில்லா கிளாஸ் 5 அம்சத்தைக் கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G சிப்செட் உடன் 6GB உடன் LPDDR4X ரேம் 64 ஜிபி சேமிப்பு மற்றும் 128ஜிபி சேமிப்பு என இரு விதமான ஆப்ஷனுடன் கூடுதலாக 4ஜிபி ரேம் பெற்ற மாடல் 64ஜிபி சேமிப்பை பெற்றுள்ளது. 512ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஆதரவினை கொண்டுள்ளது.

குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி ஆப்ஷனில் 48 எம்பி உடன் 8 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை போக்கோ M2 புரோ பெற்றதாக அமைந்துள்ளது.

போக்கோ M2 புரோ விலை

போக்கோவின் எம்2 புரோ 4GB+64GB – ரூ.13,999

எம்2 புரோ 6GB+64GB – ரூ.14,999

எம்2 புரோ 6GB+128GB – ரூ.15,999

வரும் ஜூலை 14 ஆம் தேதி பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.