ரூ.16,999 விலையில் போக்கோ X3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகமானது

சியோமி துனை நிறுவனம் போக்கோவின் புதிய Poco X3 ஸ்மார்ட்போன் மாடல் 6000mAh பேட்டரியுடன் ஸ்னாப்டிராகன் 732G சிப்செட் உடன் லிக்யூடு கூலிங் நுட்பத்தை பெற்று ரூ.16,999 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஃபிளிப்கார்ட் மூலமாக செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

முந்தைய போக்கோ எக்ஸ்2 வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள Poco X3 போனில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு 33W விரைவு சார்ஜிங் வசதியை கொண்டு குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 732G சிப்செட் உடன் 6ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் பெற்று சேமிப்பு வசதியில் 64ஜிபி மற்றும் 128ஜிபி கொண்டிருக்கின்றது. கூடுதலாக விரிவுப்படுத்தகு கூடிய மைக்ரோ எஸ்டி ஸ்லாட் 256 ஜிபி வரை ஆதரிக்கின்றது.

6.67 அங்குல (1080 × 2400 பிக்சல்) முழு HD+ 20:9 விகதம் உடன் 120 ஹெர்ட்ஸ் ரிஃபெரஷ் ரேட் கொண்டு குவாட் கேமரா ஆப்ஷனை பெற்றுள்ளது. பிரைமரி ஆப்ஷனில் 64 மெகாபிக்சல் சென்சாருடன், 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி போர்ட்ரெயிட் சென்சார் பெற்றுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 20 எம்பி சென்சார் உள்ளது.

பக்கவாட்டில் கைரேகை சென்சார்,ஸ்பிளாஸ் எதிர்ப்பு (IP53)
இரட்டை 4G VoLTE, வை-ஃபை 802.11 ac (2.4GHz + 5GHz) 2 x 2 MIMO, வோவை-ஃபை, ப்ளூடூத் 5, GPS / GLONASS / Beidou, மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் அடங்கியுள்ளது.

போக்கோ X3 விலை பட்டியல்

போக்கோ X3 6GB+64GB – ரூ.16,999

போக்கோ X3 6GB+128GB – ரூ.18,499

போக்கோ X3 8GB+128GB – ரூ.19,999