ரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது

வருகின்ற ஜூன் 18ந் தேதி அமேசான் இந்தியா இ-காமர்ஸ் இணையதளத்தின் வாயிலாக ரியல்மீ 1 சில்வர் எடிஷன் ஸ்மார்ட்போன் ₹ 10,990 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மீ 1 எடிஷன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக வரவுள்ளது.

ரியல்மீ 1 சில்வர் எடிஷன்

தற்போது ஒப்போ நிறுவனத்தின் ரியல்மீ பிராண்டில் வெளியான ரியல்மீ1 ஸ்மார்ட்போனில் டைமன்ட் பிளாக் மற்றும் சோலார் ரெட் என இரு நிறங்களில் மொத்தம் மூன்று விதமான மாறுபாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மொபைல் போனில் அறிமுகம் செய்யபட்டுள்ள சிறப்பு சிலவர் எடிஷன் ஜூன் 18ந் தேதி இந்தியாவில் அமேசான் வாயிலாக பிரத்தியேகமாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரியல்மீ 1 மொபைல் போனில் உள்ள 12-அடுக்கு நானோடெக் மெட்டீரியல் மூலம் செய்யப்பட்ட ஒரு பளபளப்பான மேற்பரப்பை கொண்ட டயமண்ட் பிளாக் பூச்சினை பெற்றதாக வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்,  6 அங்குல முழு எச்டி+ திரையை கொண்டு  மீடியா டெக் ஹெலியோ பி60 சிப்செட் மூலம் இயக்கப்பட்டு 3ஜிபி ரேம், 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என மொத்தமாக மூன்று விதமான ரேம் மாறுபாடுகளில் கிடைக்கின்றது.

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி கலர் OS 5.0 இயங்குதளத்தை பெற்ற இந்த போனில் 3410mAh பேட்டரி ஆனது செயற்கை நுண்ணிறிவு சார்ந்த அம்சங்களை பெற்றிருப்பதனால்  சிறப்பான பேட்டரி திறன் மற்றும் கூடுதலான நேரம் தாக்குப்பிடிக்கும்.

கேமரா பிரிவில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்காற்றுகின்றது. குறிப்பாக இந்த மொபைல் போனின் 13 மெகாபிக்சல் பின் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா என இரண்டும் 296 முகவியில் புள்ளிகளை கணக்கில் கொண்டு புகைப்படங்களை பதிவு செய்யும் திறன் கொண்டதாக செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்டு இரட்டை 4ஜி சிம் கார்டு ஆதரவுடன் மெம்ரி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

Realme 1 3GB+32GB – ₹ 8,990

Realme 1 4GB+64GB – ₹ 10,990 (Silver Edition)

Realme 1 4GB+64GB –  ₹10,990

Realme 1 6GB+128GB – ₹ 13,990

Recommended For You