ரியல்மீ 2 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டது

ஆன்லைன் விற்பனையை கருத்தில் கொண்டுள்ள ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மீ நிறுவனம், தனது இரண்டாவது பட்ஜெட் ஹெட்செட்டை முழு டிஸ்பிளே உடன் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 32GB மற்றும் 64GB என இரண்டு வகைகளில் வெளியாகியுள்ள இந்த போன்கள் முறையே 8,990 மற்றும் 10,990 ரூபாய் விலை கொண்டது.

இந்த போன் குறித்து ரியல்மீ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ள Realme 2 முழு ஸ்க்ரீன் கொண்ட போன் ஆகவும், 10,000 ரூபாய் விலை கொண்ட பிரிவிலும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டுயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 6.2 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன்களின் மெம்மரியை 256GB வரை எக்ஸ்பான்ட் செய்ய முடியும்.இந்த டிவைசில் 13Mp + 2Mp டுயல் ரியர் காமிரா பொக்கே எப்பெக்ட் கொண்டது. இந்த வசதி மூலம் குறிப்பிட்ட பகுதியை ஷார்பாகவும், பேக்ரவுண்டை மங்கலாகவும் இருக்கும்படி செய்யலாம்.

ரியல்மீ 2 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டது

8MP செல்பி காமிரா, ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் 296 பேசியல் புள்ளிகளை அறிந்து கொள்ளும் வசதிகளுடன், காமிராவில் எடுக்கப்படும் புகைப்படங்களை அழகு செய்து கொள்ள பியூட்டி எபெக்ட்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போன் குறித்து பேசிய ரிய்ல்மீ இந்தியா உயர் அதிகாரி மாதவ் சேத், இந்தியாவில் 10,000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படும் போன்களில் முழு டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ள முதல் ஸ்மார்ட்போன் ரியல்மீ 2. இதில் டைமண்ட் கட் டிசைன்கள், பெரியளவிலான பேட்டரி மற்றும் அதிசயிக்க செய்யும் விலையையும் கொண்டுள்ளது என்றார்.

இந்த ஹெட்செட் ஸ்நாப்டிராகன் 450 சிப்செட் உடன் 4230mAH பேட்டரியை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, இதன் பெற்றோர் நிறுவனமான OPPO-வின் Android சார்ந்த “ColorOS 5.1” மூலம் இயக்குகிறது.

ரியல்மீ 2 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டது

டைமன்ட் பிளாக் மற்றும் ரெட் கலர் வகைளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போன்கள் வரும் செப்டம்பர் 4ம் தேதி முதல் விற்பனைக்கு வரும். இதில் ப்ளூ கலர் வெர்சன்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது.

ஒபோ நிறுவனத்தின் துணை பிராண்டான ரியல்மீ, உலகளவில் இளைய தலைமுறையினரை குறிவைத்தே தங்கள் படைப்புளை வெளியிட உள்ளது. இதற்காக இந்தியாவில் முதல் முறையாக போன்களை வெளியிட உள்ளது.

கடந்த ஜூலை மாதம். ரியல்மீ ஒபோவில் இருந்து பிரிவதாக அறிவித்தது. மேலும் ஒபோ நிறுவனத்தின் முன்னாள் உயரதிகாரி ஸ்கை லீ தலைமையில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Comments are closed.